கம்பராமாயணம் 6446 · யுத்த 4.40

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இயைந்தன இயைந்தன - வானர வீரர் தமக்குத் தோன்றியவைகளை எல்லாம்; இனைய கூறலும் - இவ்வாறு கூறியபோது; மயிந்தனும் துமிந்தனும் என்னும் மாண்பினார் - மயிந்தன், துமிந்தன் என்ற பெயர்களை உடைய மாண்புடையவர்கள்; அயிந்திரம் நிறைந்தவன் - அயிந்திரம் என்னும் இலக்கணத்தைக் கற்று நிரம்பியவனான அனுமனது; ஆணை ஏவலால் - உத்தரவுப்படி ஏவியதால்; நயம் தெரி காவலர் - நீதியைத் தெரிந்த காவலர்கள்; இருவர் நண்ணினார் - இரண்டு பேர் அங்கு வந்தடைந்தனர்.

அயிந்திரம் நிறைந்தவன் அனுமன். அயிந்திரம் இந்திரனால் செய்யப்பெற்ற வடமொழி இலக்கண நூல் என்பர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As they kept saying such things, whatever came to their minds,
  2. the noble pair named Mayintaṉ and Tumintaṉ,
  3. sent at the command of him who was perfect in the Aintiram grammar,
  4. two guardians who knew the right way, arrived there.

What the poem says

Just then two wise sentries, the brothers Mayintaṉ and Tumintaṉ, arrive, sent by Aṉumaṉ. Aṉumaṉ is praised as a master of the Aintiram, an ancient Sanskrit grammar said to have been composed by Intiraṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iyaintaṉa iyaintaṉa iṉaiya kūṟalum
mayintaṉum tumintaṉum eṉṉum māṇpiṉār
ayintiram niṟaintavaṉ āṇai ēvalāl
nayam teri kāvalar iruvar naṇṇiṉār.