கம்பராமாயணம் 6447 · யுத்த 4.41

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1விலக்கினர் படைஞரை; வேதம் நீதி நூல்
இலக்கணம் நோக்கிய இயல்பர் எய்தினர்
'சலம் குறி இலர்'என அருகு சார்ந்தனர்
புலக்குறி அறநெறி பொருந்த நோக்கினார்.

பொருள் · Meaning in Tamil

படைஞரை விலக்கினர் - (வந்த காவலர்களான மயிந்தனும், துமிந்தனும்) வானரப் படைவீரர்களை விலகும்படி செய்தார்கள்; வேதம் நீதி நூல் - வேதத்திலும், நீதி நூல்களிலும் கூறப்பட்ட; இலக்கணம் நோக்கிய - மனித இலக்கணங்களை நன்கறிந்த; இயல்பர் எய்தினார் - இயல்புடைய அக்காவலர்கள் விபீடணன் முதலியோரை நெருங்கினர்; 'சலக்குறி இலர்' என - இவர்களிடம் வஞ்சகச் செய்கை எதுவும் இல்லை என்று; அருகு சார்ந்தனர் - அவர்களுக்குமிக அருகில் சென்றனர்; புலக்குறி அற நெறி - சிறந்த ஞானமுள்ளமைக்குரிய அடையாளத்தையும், அறநெறி நின்றவர் என்பதையும்; பொருந்த நோக்கினார் - பொருந்தியிருப்பதைப் பார்த்தனர்.

படைஞர்- (வானரப்) படைவீரர்கள். காவலர்களான மயிந்தனும் துமிந்தனும் வேதங்களிலும், நீதி நூல்களிலும் கூறப்பட்ட மனித இயல்புகளையும், நல்லார் பொல்லார் இலக்கணங்களையும் நன்றாகக் கற்றறிந்தவர்கள் என்பதை 'வேதம் நீதி நூல் இலக்கணம் நோக்கிய இயல்பர்' என்றார். சலக்குறி - வஞ்சகர் என்பதற்கான அடையாளம். புலக்குறி- ஞானம் உள்ளவர்கள் என்பதற்கான அடையாளம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They held back the soldiers; those versed in the signs
  2. taught by the Vedas and the books of law came forward;
  3. "They bear no marks of deceit," they judged, and drew near,
  4. and saw that the marks of wisdom and the path of dharma were present in them.

What the poem says

Mayintaṉ and Tumintaṉ hold the angry monkeys back. They are learned in the signs, described in the Vedas and law books, by which the good can be told from the wicked. Looking closely at Vīṭaṇaṉ and his companions, they see no sign of treachery, only the marks of wisdom and righteousness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vilakkiṉar paṭaiñarai; vētam nīti nūl
ilakkaṇam nōkkiya iyalpar eytiṉār
'calak kuṟi ilar' eṉa aruku cārntaṉar
pulak kuṟi aṟa neṟi porunta nōkkiṉār.