கம்பராமாயணம் 6448 · யுத்த 4.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
யார்? இவண் எய்திய கருமம் யாவது? - (அனுமன் ஆணைப்படி வந்த காவலரில் மூத்தவனான மயிந்தன் வீடணன் முதலியோரை நோக்கி) நீங்கள் யார்? இங்கு வந்த காரியம் யாது? போரது புரிதிரோ - போர் செய்ய வந்தீர்களா?; புறத்து ஒர் எண்ணமோ? - அல்லது, அதுவல்லாத வேறு ஒரு எண்ணத்துடன் வந்தீர்களா?; சார்வு உற நின்ற நீர் - இந்த வானரம் படையைச் சார்ந்து நின்றிருக்கும் நீங்கள்; சமைந்தவாறு எலாம் - உங்கள் மனத்தில் நினைத்து வந்ததை எல்லாம்; சோர்விலீர் - மறதியில்லாமல்; மெய்ம்முறை சொல்லுவீர் என்றான் - உண்மையை மறைக்காது முறையாகக் கூறுங்கள் என்று மயிந்தன் கேட்டான்.
தொடர்ந்து வரும் 6410ஆம் பாடலில் "மயிந்தனும் அவ்வுரை மனத்து வைத்து" என்று கூறப்படுவதால் இங்குக் கேட்டவன் மயிந்தன் என்று கொள்ளப்பட்டது. மயிந்தனும், துமிந்தனும் சகோதரர்கள். சமைந்தவாறு- எண்ணியவாறு. சோர்வு-மறதி; மனச் சோர்வுமாம். இப்படி அகப்பட்டுக் கொண்டோமே என்று சோர்வடையாதீர்கள் உண்மையைக் கூறுங்கள் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Who are you? What business brings you here?
- Have you come to make war? Or have you some other purpose?
- You who stand close beside our army, all that you intend,
- tell us truly and in order, holding nothing back," he said.
What the poem says
Mayintaṉ questions the newcomers: who are they, why have they come, and do they mean to fight or have some other purpose? He asks them to tell the whole truth without fear. The commentary works out that the speaker is Mayintaṉ from a later verse, where he takes their answer to Irāmaṉ.