கம்பராமாயணம் 6449 · யுத்த 4.43

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தகவு உறு சிந்தையன் - (மயிந்தன் வினவிய வினாவுக்கு, மறு மொழியாக, வீடணனுடைய அமைச்சர்களில் மூத்தவனான, அனலன் தகைமை வாய்ந்த மனத்தை உடையவனும்; தரும நீதியன் - அறநெறி நின்ற, நீதியை உடையவனும்; நான்முகற்கு மகன் மகன் மைந்தன் - பிரம தேவனுக்குப் பேரனுக்கு மகனும்; வாய்மையான் - உண்மையாளனும் ஆனவீடணன்; பகலவன் வழி முதல் - சூரிய குலத்தில் தோன்றியவனும்; பாரின் நாயகன் - உலகுக் கெல்லாம் தலைவனும் ஆன இராமபிரானே; புகல் - எமக்குப் புகலிடம் ஆவான் என்று; அவன் கழல் அடைந்து - அப்பெருமானது திருவடிகளை அடைந்து; உய்யப் போந்தனன் - உய்வு பெற வந்துள்ளான் (என்று கூறினான்).

தகவு - நடுவுநிலைமை. நான்முகனுக்கு மகன் புலத்தியன்; அவன் மகன் விச்சிரவசு; அவன் மகன் வீடணன்.

பகலவன்- சூரியன். வழிமுதல்- வழித் தோன்றல். இராமபிரானது திருவடிகளுக்கே அடைக்கலமாகி அவனருளால் உய்வு பெற வந்தான் என்பதை 'புகல் அவன் கழல் அடைந்து உய்யப் போந்தனன்' என்றான். உலகனைத்துக்கும் தலைவனான திருமாலின் அவதாரம் ஆதலின் இராமனை 'பாரின் நாயகன்' என்றான். நில மகளுக்குத் தலைவன் எனினும் பொருந்தும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "To the Lord of the earth, first of the line of the Sun,
  2. seeking his feet as refuge, he has come to be saved;
  3. he is upright of mind, a man of dharma and justice,
  4. son of the son's son of the Four-faced one, a man of truth."

What the poem says

Aṉalaṉ, the eldest of Vīṭaṇaṉ's ministers, answers for his master. Vīṭaṇaṉ is just, righteous and truthful, the great-grandson of Brahmā, through Pulastya and Viśravas. He has come to take refuge at the feet of Irāmaṉ, the lord of the earth born in the Solar dynasty, and to be saved.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pakalavaṉ vaḻi mutal pāriṉ nāyakaṉ
pukal avaṉ kaḻal aṭaintu uyyap pōntaṉaṉ
takavu uṟu cintaiyaṉ taruma nītiyaṉ
makaṉ makaṉ maintaṉ nāṉmukaṟku vāymaiyāṉ.