கம்பராமாயணம் 6451 · யுத்த 4.45

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"சுடு தியைத் துகில் இடை பொதிந்த துன்மதி!
இடுதியே சிறையிடை இறைவன் தேவியை;
விடுதியேல் உய்குதி; விடாது வேட்டியேல்
படுதி" என்று உறுதிகள் பலவும் பன்னினான்.

பொருள் · Meaning in Tamil

சுடுதியை துகிலிடைப் பொதிந்து - (இந்த வீடணன், இராவணனை நோக்கி) சுடும் தீயினை துணியிலே பொதிந்து வைப்பதைப் போல; துன்மதி - கெட்ட அறிவை உடையவனே (நீ), சிறையிடை இறைவன் தேவியை இடுதியே - இறைவனான இராமபிரானுடைய மனைவியை சிறையிலே வைத்தாயே; விடுதியேல் உய்குதி - (பிராட்டியைச் சிறையிலிருந்து) விடுவிப்பாயானால் தப்பிப்பிழைப்பாய்; விடாது வேட்டியேல் படுதி - அவ்வாறு விடாமல் விரும்புவாயானால் இறந்து படுவாய்; என்று உறுதிகள் பலவும் பன்னினான் - என்றெல்லாம் பல உறுதியுரைகளை விரித்துக் கூறினான்.

'சுடு தீ' என்றது 'எதுகை' நோக்கி சுடுதி எனக்குறுகியது. செய்யுள் விகாரம். 'சுடு நெருப்பை துணியில் மூடிக்கட்டிவைத்தது போல சீதையைச் சிறை வைத்தாய். மடியில் நெருப்பைக் கட்டிவைத்தவன் மாய்வது போல நீ மாய்வது உறுதி' என அறிவுறுத்தினானென்க. பன்னுதல் - விரித்துரைத்தல். வேட்டல் - விரும்புதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "'Wrapping a scorching fire in cloth, you fool,
  2. you have shut the Lord's queen in prison;
  3. if you release her, you will live; if you will not let her go but still desire her,
  4. you will die' — so he urged him with many counsels."

What the poem says

Aṉalaṉ tells how Vīṭaṇaṉ warned Irāvaṇaṉ again and again. Keeping Cītai prisoner is like wrapping a burning coal in cloth: it will destroy whoever holds it. Release her and live; keep her and die.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"cuṭu tiyait tukiliṭaip potintu tuṉmati!
iṭutiyē ciṟaiyiṭai iṟaivaṉ tēviyai;
viṭutiyēl uykuti; viṭātu vēṭṭiyēl
paṭuti" eṉṟu uṟutikaḷ palavum paṉṉiṉāṉ.