கம்பராமாயணம் 6452 · யுத்த 4.46

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மறம் தரு சிந்தையன் - பாவச் செயல்களையே நினைந்து செய்யும் மனத்தினனும்; மதியில் நீங்கினான் - நல்லறிவு நீங்கப் பெற்றவனுமான இராவணன் வீடணனை நோக்கி; பிறந்தனை பின்பு - நீ எனக்குப் பின்பு பிறந்த தம்பியாவாய்; அதின் பிழைத்தி - அதனாலே பிழைத்தாய்; பேர்குதி- இப்போதே என் எதிரிலிருந்து போய்விடு; நிற்றியேல் இறந்தனை - இனி இங்கு நிற்பாயானால் இறந்து படுவாய்; என்ன - என்று கூற; இன்னவன் துறந்தனன் - இந்த வீடணன் இராவணனைவிட்டு நீங்கினான்; எனவிரித்து அனலன் சொல்லினான் - எனப் பலவாறு விரித்து வீடணனது முதல் அமைச்சனான அனலன் கூறினான்.

நல்லறிவு படைத்தவர்கள் இத்தகைய செயலைச் செய்யார். எனவே இதனைப் புரிந்த இராவணனை 'மதியின் நீங்கினான்' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "He of sinful mind, bereft of reason, said, 'You were born after me;
  2. by that alone you are spared; be gone;
  3. if you stay, you are dead' — and so this one
  4. has renounced him," Aṉalaṉ explained at length.

What the poem says

Aṉalaṉ finishes his account. The wicked Irāvaṇaṉ spared Vīṭaṇaṉ only because he is his younger brother, and ordered him to leave on pain of death. So Vīṭaṇaṉ has left him for good.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'maṟam taru cintaiyaṉ matiyiṉ nīṅkiṉāṉ
"piṟantaṉai piṉpu; atiṉ piḻaitti; pērkuti;
iṟantaṉai niṟṟiyēl" eṉṉa iṉṉavaṉ
tuṟantaṉaṉ' eṉa virittu aṉalaṉ colliṉāṉ.