கம்பராமாயணம் 6453 · யுத்த 4.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மயிந்தனும் அவ்வுரைமனத்து வைத்து- மயிந்தன் என்னும் வானர வீரன், அனலன் கூறியவைகளை எல்லாம் மனத்திற் கொண்டு; நீ இயைந்தது நாயகற்கு இயம்புவேன் எனா- நீ இங்கு வந்த இதனை தலைவனாகிய இராமனிடம் கூறுவேன் என்று; தம்பியும், பெயர்வில் சேனையும் - தனது தம்பியான துமிந்தனையும் போரில் பின் வாங்காத வானரப் படையினரையும்; அயர்ந்திலிர் காமின் என்று - சோர்வின்றி எச்சரிக்கையாகக் காவல் புரிந்திருங்கள் என்று கூறி; அமைவது ஆக்கியே பெயர்ந்தனன் - விழிப்புடன் இருக்குமாறு செய்து அங்கிருந்து இராமனிடம் சென்றான்.
இயைந்தது - இராமபிரானைச் சரண் அடையவந்தது. பெயர்வு இல் சேனை - போருக்குப் பின் வாங்காத படை. அயர்தல்- சோர்தல். காமின் - காத்திருங்கள். வந்திருக்கும் புதியவர்கள் கூறியதெல்லாம் நல்லதே எனினும் நம்புவது எவ்வாறு என்பதால் இவர்கள் தப்பிச் செல்லாதபடி காவல் புரிந்திருங்கள் என்று தம்பியையும், வானரப்படையினரையும் 'அயர்ந்திலிர் காமின் என அமைவதாக்கிப் பெயர்ந்தனன் மயிந்தன்' என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Mayintaṉ kept those words in his mind and, saying, "What you have come for
- I will tell our Lord,"
- went off, having made everything secure, telling his brother and the unyielding army,
- "Keep watch, and do not slacken!"
What the poem says
Mayintaṉ is satisfied but careful. He goes to report to Irāmaṉ and leaves his brother Tumintaṉ and the soldiers to guard the visitors closely in the meantime, because even fair words from strangers should not simply be trusted.