கம்பராமாயணம் 6454 · யுத்த 4.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தருமமும் ஞானமும் தவமும் வேலியாய் - அறநெறியும், ஞான உணர்வும் தவ ஒழுக்கமும் ஆகிய மூன்றுமே மூன்று பக்கங்களில் அமைந்த மதில்களாகவும்; மருவ அரும் பெருமையும் பொறையும் வாயிலாய் - அடைவதற்கரிய பெருமையும் பொறுமையும் இரண்டு வாயில்கள் ஆகவும்; கருணை அம் கோயிலுள் - கருணையாகிய அழகிய கோவிலுக்குள்ளே; இருந்த கண்ணனை - அமர்ந்திருந்த அருட்கண்ணனாகிய இராமனை; அருள் நெறி எய்திச் சென்று - அவனது அருளாகிய நெறியிலே பொருந்திச் சென்று; அடிவணங்கினான் - மயிந்தன் இராமபிரானது திருவடிகளை வணங்கலாயினான்.
வேலி - மதிள். அறநெறியில் நின்று, தவஒழுக்கம் பூண்டு ஞான நிலையை எய்துவதே இறைவன் அருளைப் பெற்றுய்வதற்குரிய தாகும் என்பதால், கருணை என்னும் கோயிலில் கோயில் கொண்ட பெருமானது திருக் கோவிலுக்கு மூன்று புறமும் அறம் முதலிய மூன்றும் மதில்கள் என்றார். பெருமையும், பொறுமையும் ஆகிய பண்புகளை வாயில்கள் என்றார். கருணை என்னும் பண்பே அப்பரமன் உறையும் திருக்கோயில் என்றார். அடியார்களின் குறையை நினைந்து அவன் மறுத்தாலும் அப்பரமனது கருணைப் பண்பு அடியவர்களை ஆட் கொள்ள வல்லது. இதனை "நீ மறந்தாய் எனினும் உனதருள் மறவாது" என்ற வள்ளலார் கூற்றும் புலப்படுத்தும். "கருணை நிறைந்து அகம் புறமும் துளும்பி வழிந்து, உயிர்க் கெல்லாம் களைகண் ஆகி, தெருள் நிறைந்த இன்ப நிலை வளர்க்கின்ற" கண்களை உடையவன் இராமபிரான் என்பதால் "கண்ணன்" என்றார் போலும். கருணைக் கோயிலை அடைதற்கு அருள் நெறியே பற்றுக் கோடாக மயிந்தன் சென்றான் என்பதால் "அருள் நெறிஎய்திச் சென்று" என்றார். இப்பாட்டு உருவக அணியாகும். இராமபிரானை வருணித்த அருமைத் திருத்தொடர்கள் தமிழுக்கும் சமயத்துக்கும் அருங்கலமாதல் உணர்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With dharma, wisdom and penance for its walls,
- with greatness hard to attain and patience for its gates,
- to the Gracious-Eyed One who sat within the lovely temple of compassion
- he went along the path of grace, and bowed at his feet.
What the poem says
Mayintaṉ goes to Irāmaṉ and bows at his feet. The poet pictures Irāmaṉ seated inside a temple made of compassion. Its walls are righteousness, wisdom and penance, and its gates are greatness and patience. The only way to reach it is the path of grace. The commentary calls the verse an extended metaphor and quotes Vaḷḷalār: "Though you forget, your grace does not forget."