கம்பராமாயணம் 6455 · யுத்த 4.49
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஊழியாய் - ஊழியின் இறுதியிலும் அழியாதவனாய் என்றும் உள்ள பெருமானே; உண்டு, உரை, உணர்த்துவது என - அடியவனாகிய நான் உனக்குத் தெரிவிக்க வேண்டிய உரை ஒன்று உள்ளது என மயிந்தன் கூற; புண்டரீகத்தடம் பூத்த பூட்சியான் - தாமரை மலர்கள் மலர்ந்த தடாகம் போன்ற திருமேனி உடைய இராமபிரான்; மண்டிலச் சடைமுடி துளக்கி - வட்டவடிவமான தனது சடைமுடியை அசைத்து; வாய்மையாய் - உண்மையாளனே; கண்டதும் கேட்டதும் - நீ பார்த்தவைகளையும், கேட்டவைகளையும்; கழறுவாய் என்றான் - கூறுவாயாக என்றான்.
உலகனைத்தும் அழியும் பேரூழிக்காலத்தும் தான் அழியாதிருப்பவன் இறைவன் என்பதால் இராமனை 'ஊழியாய்' என்றான். "தாமரை நீள் வாசத்தடம் போல் வருவானே" என்ற திருவாய் மொழி (6.6. 1) ஒப்பிடத்தக்கது. கார்க்கடல் கமலம் பூத்ததெனப் பொலிவான் (6493) எனவும், 'வதனம் வாய் கண்கள் கை கால் எனப் புண்ட ரீகத் தடம் பூத்து' (7530) எனவும் பின்னரும் கூறுவார். பூட்சி- உடல் (திருமேனி). மண்டிலம் - வட்டம். இராமபிரானுடைய நீல நிறத் திரு மேனி தாமரை இலை படர்ந்த தடாகம். அப்பெருமானது கண்கள், வாய், கைகள், கால்கள் சிவந்த தாமரை மலர்கள். எனவே தாமரை மலர்ந்த தடாகம் போன்ற திருமேனியுடையவன் என்பதை "புண்டரீகத்தடம் பூத்த பூட்சியான்" என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "There is a word I must report to you, O Eternal One!" he said;
- and He whose form was like a pool of lotuses in bloom,
- nodding his round crown of matted hair, said, "Man of truth,
- tell me what you have seen and heard."
What the poem says
Mayintaṉ says he has news. Irāmaṉ nods his head with its coiled, matted hair and asks him to report everything. His dark body with its red eyes, lips, hands and feet is compared to a lotus pool, where blue-green leaves are dotted with red flowers. The commentary notes that Kampaṉ uses the same image elsewhere and compares a Tiruvāymoḻi verse.