கம்பராமாயணம் 6456 · யுத்த 4.50

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'விளைவினை அறிந்திலம்; வீடணப் பெயர்
நளிமலை யாக்கையன் நால்வரோடு உடன்
களவு இயல் வஞ்சனை இலங்கை காவலற்கு
இளவல் நம் சேனையின் நடுவண் எய்தினான்.

பொருள் · Meaning in Tamil

விளைவினை அறிந்திலம் - பின்னால் நேரப் போவதொன்றும் நாங்கள் அறியோம்; களவியல் வஞ்சனை - களவுத்தன்மையுடன் கூடிய வஞ்சகத்தையும் கொண்ட; இலங்கை காவலற்கு இளவல் - இலங்கை வேந்தனான இராவணனுடைய தம்பியான; வீடணப் பெயர்- வீடணன் என்ற பெயருள்ள; நளிர் மலர்க்கையினன் - குளிர்ந்த மலர் போன்ற கைகளை உடையவன்; உடன் நால்வரோடு - தன்னுடன் வந்த நான்கு பேருடனே; நம் சேனையின் நடுவண் எய்தினான் - நமது வானரப் படைக்கு நடுவே வந்தடைந்தான்.

சீதாபிராட்டியை வஞ்சகத்தால் கொண்டு சென்று சிறை வைத்த இராவணனை 'களவியல் வஞ்சனை இலங்கைக் காவலன்' என்றார். இவ்வாறு அமைச்சர் நால்வரோடும் இவன் இங்கு வந்திருப்பதால் பின்னால் நேருவதொன்றும் நாம் தெரிந்தோமில்லை என்பதனை "வினை விளைவு அறிந்திலம்" என்றான். நடுவண் - மையம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "We do not know what may come of it; one named Vīṭaṇaṉ,
  2. with hands like cool flowers, together with four others,
  3. younger brother of the guardian of Laṅkā, whose way is theft and deceit,
  4. has come into the midst of our army."

What the poem says

Mayintaṉ reports that Vīṭaṇaṉ, younger brother of Irāvaṇaṉ, who stole Cītai by trickery, has come into the camp with four companions. He admits he does not know what will come of it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'viḷaiviṉai aṟintilam; vīṭaṇap peyar
naḷir malark kaiyiṉaṉ nālvarōṭu uṭaṉ
kaḷavu iyal vañcaṉai ilaṅkai kāvalaṟku
iḷaval nam cēṉaiyiṉ naṭuvaṇ eytiṉāṉ.