கம்பராமாயணம் 6458 · யுத்த 4.52

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முரண்புகுதீவினை முடித்த முன்னவன் - அறத்துக்கு மாறானதாகப் புக்க தீயசெயலைச் செய்து முடித்த அண்ணனாகிய இராவணன்; கரண்புகு சூழலே சூழ - மனம் போன போக்கிலேயே போக (அதைப் பார்த்த வீடணன்); காண்பதோர் அரண்பிறிதில் என - நமக்குப் பாதுகாப்பு வேறெதுவும் காணப்படவில்லை என்று; அருளின் வேலையை - அருட்கடலாக விளங்கும் இராமபிரானை; சரண்புகுந்தனன் - அடைக்கலம் அடையப் புகுந்தான்; என முன்னம் சாற்றினான் - என்று முதலிலேயே கூறினான்.

முரண்-மாறுபாடு (அறத்துக்கு மாறானது). தீவினை-தீய செயல். சீதா பிராட்டியை வஞ்சித்துக் கவர்ந்து வந்தது சிறை வைத்து போன்ற தீய செயல்கள். கரண்-அந்தக் கரணம். இங்கே மனம். முரண்பட்ட தீவினை செய்த அண்ணன், மனம்போன போக்கில் செல்வதால் - இவனுடன் வாழ்தல் ஏற்றதல்ல. இராமபிரானைத் தவிர புகலிடம் வேறில்லை. எனவே அருட்கடலான இராமனைச் சரண் அடைய வந்துள்ளான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "'Since his elder brother, who has done an evil deed against all right,
  2. follows only where his own mind leads, and he can see
  3. no other shelter, he has come to take refuge
  4. with the ocean of grace' — so he said first."

What the poem says

Mayintaṉ repeats Aṉalaṉ's words. Irāvaṇaṉ has committed a great wrong and will listen only to his own wilful mind. Seeing no other protection, Vīṭaṇaṉ has come to surrender to Irāmaṉ, the ocean of grace.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'muraṇ puku tīviṉai muṭitta muṉṉavaṉ
karaṇ puku cūḻalē cūḻak kāṇpatu ōr
araṇ piṟitu il eṉa aruḷiṉ vēlaiyaic
caraṇ pukuntaṉaṉ" eṉa muṉṉam cāṟṟiṉāṉ.