கம்பராமாயணம் 6460 · யுத்த 4.54

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கற்புடைத் தேவியை - (மேலும் இராவணனை நோக்கி வீடணன்) கற்புக்கரசியான இராமபிரானுக்குரிய தேவியான சீதாபிராட்டியை; விடாது காத்தியேல் - இராமபிரானிடம் செல்லவிடாது சிறையில் வைத்துக் காத்தாயானால்; இலங்கை எற்புடைக் குன்றமாம் - (இலங்கையில் வாழும் நமது அரக்கர்களின் இனமெலாம் இறந்துபட) இலங்கைநகர் முழுவதும் எலும்புகளாலான குன்றுகளே நிறைந்திருக்கும்; ஏழை - அறிவற்றவனே!; நின் பொற்புடை முடித்தலை புரளும் - உனது அழகிய மணிமுடியை அணிந்துள்ள பத்துத்தலைகளும் இராமனால் துண்டிக்கப்பட்டுத் தரையிலே புரளும்; என்று ஒரு நற்பொருள் உணர்த்தினன் - என்று இராவணனுக்கு நன்மை தரும் ஒரு பொருளையும் உணர்த்தினான்; என்றும் நாட்டினான் - என்றும் உறுதியாகக் கூறினான்.

எற்பு-எலும்பு. குன்றம்-மலை. இலங்கை பாழாகி எலும்பு மலைகளாய் விடும் என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "'If you keep the chaste queen and will not let her go,
  2. Laṅkā will become a mountain of bones; fool! your
  3. heads with their splendid crowns will roll' — this good counsel
  4. he gave him," he also affirmed.

What the poem says

Mayintaṉ reports Vīṭaṇaṉ's warning to Irāvaṇaṉ: if he goes on holding Cītai, Laṅkā will be heaped with the bones of the dead, and his ten crowned heads will roll on the ground.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'kaṟpuṭait tēviyai viṭātu kāttiyēl
eṟpuṭaik kuṉṟam ām ilaṅkai; ēḻai! niṉ
poṟpuṭai muṭit talai puraḷum eṉṟu oru
naṟ poruḷ uṇarttiṉaṉ" eṉṟum nāṭṭiṉāṉ.