கம்பராமாயணம் 6462 · யுத்த 4.56
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அப்பொழுது இராமனும் - மயிந்தன் இவ்வாறு கூறியதைக் கேட்டபொழுது இராமபிரானும்; அருகில் நண்பரை - (தன்னைவிட்டுப் பிரியாது) பக்கத்தில் இருக்கும் சுக்கிரீவன் முதலான நண்பர்களை நோக்கி; இப்பொருள் கேட்ட நீர்- மயிந்தன் கூறிய இக்கருத்தைக் கேட்ட நீங்கள்; இவன் கைப்புகற்பாலனோ - இந்த வீடணன் நமது பக்கம் சேர்த்துக் கொள்ளத்தக்கவனா; கழியற் பாலனோ - கழித்து ஒதுக்கத்தக்கவனா; ஒப்புற நும் உணர்வினால் - உங்கள் மன உணர்வுக்கு ஒப்ப ஆராய்ந்து பார்த்து; இயம்புவீர் என்றான் - உங்கள் கருத்தை நீங்கள் கூறுமின் என்றான்.
இப்பொருள் - மயிந்தன் கூறிய வீடணன் சரண்புக வந்த செய்தி. கைப்புகல்-நம் பக்கம்சேர்தல். கழியல்-நீக்குதல். ஒப்புற-ஏற்ப. பிறர் கருத்தையும் கேட்டுச் செயற்படும் இராமபிரானுடைய குணநலம் புலப்படுகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Then Irāmaṉ turned to the friends beside him:
- "You who have heard this matter, tell me — is he
- one to be taken in, or one to be cast out?
- Weigh it fairly with your own understanding," he said.
What the poem says
Before deciding, Irāmaṉ asks Cukkirīvaṉ and his other companions what they think. Should Vīṭaṇaṉ be accepted or turned away? The commentary praises Irāmaṉ's habit of consulting others before he acts. This begins the famous council on whether to grant refuge to the enemy's brother.