கம்பராமாயணம் 6465 · யுத்த 4.59

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆயினும், விளம்புவென், அருளின் ஆழியாய்!
ஏயினது ஆதலின், 'அறிவிற்கு ஏற்றன,
தூய'என்று எண்ணினும், 'துணிவு அன்று'என்னினும்
மேயது கேட்டியால்! விளைவு நோக்குவாய்.

பொருள் · Meaning in Tamil

அருளின் ஆழியாய் - அருட்கடலாகத் திகழ்பவனே! ஆயினும் விளம்புவென் - ஆனாலும் நீ கேட்பதால் சொல்லுகிறேன்; ஏயினது ஆதலின் - நீ கட்டளை இட்டாய் ஆதலால்; அறிவிற்கு ஏற்றன - எனது அறிவுக்குப் பொருந்தியவைகளை; தூய அன்று என்னினும் - உன் கருத்துக்கேற்ப தூய்மையானது அல்ல என்றாலும்; துணிவு அன்று என்னினும் - துணிந்து முடிவானதல்ல என்றாலும்; விளைவு நோக்குவாய் - பின் விளைவை நினைந்து பார்க்கும் நீ; மேயது கேட்டியால் - எனது மனத்துக்குப் பொருந்துவதைச் சொல்லக் கேட்பாயாக (என்றான்.

நீ இட்ட கட்டளையை ஏற்றுச் செயல்படும் தொண்டன் என்பதால் நீ ஏவியதைச் செய்வேன் என்பான் 'ஏயது ஆதலின்' என்றான். எனது கருத்து நல்லதல்ல என்றாலும், முடிந்த முடிவு அல்ல என்றாலும் அறிவுக்குப் பட்டதைச் சொல்வேன் என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Even so, I will speak, O ocean of grace,
  2. since you have commanded it: what fits my understanding,
  3. though it may not be pure, though it may not be a settled conclusion —
  4. hear what has come to my mind, you who look ahead to consequences."

What the poem says

Cukkirīvaṉ, having said Irāmaṉ hardly needs advice, agrees to speak because he has been ordered to, as a servant obeys his master.

He hedges carefully: his view may not be wholly pure, and it is not a final verdict, but it is what his own judgement tells him. He appeals to Irāmaṉ as one who always considers how things will turn out.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyiṉum, viḷampuveṉ, aruḷiṉ āḻiyāy!
ēyiṉatu ātaliṉ, 'aṟiviṟku ēṟṟaṉa,
tūya' aṉṟu eṉṉiṉum, 'tuṇivu aṉṟu' eṉṉiṉum
mēyatu kēṭṭiyāl! viḷaivu nōkkuvāy.