கம்பராமாயணம் 6472 · யுத்த 4.66

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கூற்றுவன் தன்னொடு இவ் உலகம் கூடி வந்து
ஏற்றன என்னினும் வெல்ல ஏற்றுளம்;
மாற்றவன் தம்பி நம்மருங்கு வந்திவண்
தோற்றுமோ அன்னவன் துணைவன் ஆகுமோ?

பொருள் · Meaning in Tamil

கூற்றுவன் தன்னொடு எவ்வுலகும் கூடிவந்து ஏற்றன என்னினும் - நமக்கு எதிராக எமனுடன் சேர்ந்து கொண்டு எல்லா உலகத்தவர்களும் கூடிநின்று எதிர்த்தார் என்றாலும்; வெல்ல ஏற்றுளம் - வெல்வது என்ற முடிவை ஏற்றுள்ளோம்; மாற்றவன் தம்பி - நமக்குப் பகைவனான இராவணனுடைய தம்பியாகிய இந்த வீடணன்; நம் மருங்கு வந்து - நமது பக்கம் வந்து சேர்ந்து; தோற்றுமோ - தோன்றுவானோ? அன்னவன் துணைவன் ஆகுமோ - அவன் நமக்கு வெற்றிதேடித் தரும் துணைவன் ஆவானோ?

ஏற்றன - எதிர்த்தன. மாற்றவன் - பகைவன் (இராவணன்).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Even if every world, joined with Death himself, came on together
  2. and stood against us, we have resolved to conquer;
  3. the enemy's younger brother, coming here to our side,
  4. will he prove his worth? Will such a one become our ally?"

What the poem says

This continues the opposing counsel. The speaker insists that Irāmaṉ's side is confident of victory even if all the worlds and Yama, the god of death, fought against them.

What need, then, of help from the brother of their enemy Irāvaṇaṉ? Such a man could not truly stand with them or bring them victory.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kūṟṟuvaṉtaṉṉoṭu ev ulakum kūṭi vantu
ēṟṟaṉa eṉṉiṉum vella ēṟṟuḷam;
māṟṟavaṉ tampi nam maruṅku vantu ivaṇ
tōṟṟumō aṉṉavaṉ tuṇaivaṉ ākumō?