கம்பராமாயணம் 6473 · யுத்த 4.67
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அரக்கரை ஆசு அறக் கொன்று - அரக்கர்களையெல்லாம் அடியோடு கொன்று; நல்லறம் புரக்க வந்தனம் - நல்ல அறத்தைக் காப்பதற்கு வந்தோம், எனும் பெருமை பூண்ட நாம் - என்ற பெருமையைப் பூண்டுள்ள நாம்; இரக்கம் இல் அவரையே - இரக்கம் சிறிதுமில்லாத அவர்களையே; துணைக்கொண்டு ஏற்றுமேல் - துணையாகக் கொண்டு போரை ஏற்றுக்கொண்டோம் என்றால்; அவர் வலிக்கு சுருக்கம் உண்டு - நம்முடைய வலிமைக்கு குறைவுண்டு; என்று தோன்றும் - என்று தோன்றுமல்லவா?
ஆசு அற - சிறிதுமின்றி (அடியோடு). புரக்க - காக்க. வந்தனம் - வந்தோம். அவர் என்ற சொல் இராம இலக்குவர்களைக் குறிக்கும். பகைவர் பார்வையில் அவர் என்று குறிக்கப்பட்டது. ஏற்றும் எல் - ஏற்றுக் கொண்டோம் என்றால் என்பது பொருள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "We who bear the glory of saying, 'We have come to slay the rākṣasas
- root and branch and to protect true dharma' —
- if we take on this war with those very pitiless ones as our helpers,
- it will seem that their strength is somehow lacking."
What the poem says
The argument here is about reputation. Irāmaṉ's side has declared that it came to wipe out the rākṣasas and protect righteousness.
If they now fight with a rākṣasa as their ally, the world will say that Irāmaṉ and Ilakkuvaṉ were not strong enough on their own. "Their" refers to the two brothers, seen as the enemy would see them.