கம்பராமாயணம் 6475 · யுத்த 4.69

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வஞ்சனை இயற்றிட வந்தவாறு அலால்
'தஞ்சு'என நம் வயின் சார்ந்து உளான் அலன்;
நஞ்சினிற் கொடியனை நயந்து கோடியோ?
அஞ்சன வண்ண!'என்று அறியக் கூறினான்.

பொருள் · Meaning in Tamil

அஞ்சன வண்ண - மை போன்ற நிறத்தை உடையவனே! வஞ்சனை இயற்றிட - வஞ்சகம் செய்வதற்காக; வந்தவாறு அலால் - வந்திருப்பதே அல்லாமல்; 'தஞ்சு' என நம் வயின் சார்ந்துளான் அலன் - அடைக்கலம் என்று நம்மிடம் அடைந்தவன் அல்லன்; நஞ்சினில் கொடியனை - விடத்தினும் கொடியனான இந்த அரக்கனை (வீடணனை); நயந்துகோடியோ - விரும்பி ஏற்றுக் கொள்வாயோ? என்று அறியக் கூறினான் - என்று தன் கருத்தை இராமபிரான் அறியும்படி சுக்கிரீவன் கூறினன்.

இராவணனிடம் மிகுந்த அன்புடைய தம்பி இவன். 'தஞ்சம்' என்று, நம்மிடம் வந்தது வஞ்சகச் செயலே என்பது சுக்கிரீவன் கருத்து. தஞ்சு - தஞ்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "He has come only to work some treachery;
  2. he has not come to us as one seeking shelter.
  3. Will you welcome and take in one crueller than poison,
  4. you whose colour is like collyrium?" So he spoke, making his mind known.

What the poem says

Cukkirīvaṉ ends his speech by calling Vīṭaṇaṉ's plea for refuge a trick. Vīṭaṇaṉ, he thinks, is Irāvaṇaṉ's beloved brother and has come only as a spy or saboteur.

Irāmaṉ is addressed as dark like collyrium, the black eye-paint, a common image for his dark-hued body.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vañcaṉai iyaṟṟiṭa vantavāṟu alāl
'tañcu' eṉa namvayiṉ cārntuḷāṉ alaṉ;
nañciṉiṉ koṭiyaṉai nayantu kōṭiyō?
añcaṉa vaṇṇa!' eṉṟu aṟiyak kūṟiṉāṉ.