கம்பராமாயணம் 6476 · யுத்த 4.70

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அன்னவன் பின்னுற, அலகு இல் கேள்வியால்
தன் நிகர் பிறிது இலாத் தகைய சாம்பனை,
'என்னை உன் கருத்து?'என இறை வினாயினான்;
சொல் முறை நெறி தெரிந்து அவனும் சொல்லுவான்.

பொருள் · Meaning in Tamil

அன்னவன் பின்னுற - அந்த சுக்கிரீவன் தனது கருத்தைக் கூறி முடித்ததன்பின்; அலகின் கேள்வியின் - அளவற்ற கேள்வி ஞானத்திலே, தன் நிகர் பிறர் இலா - தனக்கு ஒப்பாக வேறு எவரையும் கூற இயலாத; தகைய சாம்பனை - பெருமைமிக்க சாம்பவந்தனை நோக்கி; என்னை உன் கருத்து - உனது கருத்து என்ன; என இறை வினாயினான் - என்று இறைவனான இராமபிரான் கேட்டான்; தொன்முறை நெறி தெரிந்து - பழமையான நெறிமுறைகளை நன்கு ஆராய்ந்து; அவனும் சொல்லுவான் - சாம்பவந்தனும் தனது கருத்தைக் கூறுவானாயினான்;

அன்னவன் - சுக்கிரீவன். பின்னுற - கூறியபின். பிரமதேவன் அம்சமாகத் தோன்றியவன், கல்வி கேள்விகளில் வல்லவன், தனக்கு எவரையும் நிகர் கூற இயலாதவன் என்பதால் "அலகில் கேள்வியின் தன் நிகர் பிறரிலாத்தகைய சாம்பன்” என்றார். தொன்மைக்காலமாகத் தொடர்ந்திருக்கும் நெறி, முறைகளை நன்கு தேர்ந்தவனாதலின் "தொன் முறை நெறி தெரிந்து சொல்லுவான்” என்றார். இது முதல் ஆறுபாடல்கள் சாம்பவந்தன் கூற்றாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he had finished, the lord asked Cāmpaṉ, so worthy
  2. that none could equal him in boundless learning,
  3. "What is your view?" And he, discerning
  4. the path of ancient custom, began to speak.

What the poem says

After Cukkirīvaṉ, Irāmaṉ turns to Cāmpaṉ (Jāmbavān), the aged bear-king, said to be born of a portion of Brahmā and unmatched in learning.

Cāmpaṉ grounds his advice in long-established rules of statecraft. The next six verses are his speech.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉavaṉ piṉṉuṟa, alaku il kēḷviyiṉ
taṉ nikar piṟar ilāt takaiya cāmpaṉai,
'eṉṉai uṉ karuttu?' eṉa iṟai viṉāyiṉāṉ;
toṉ muṟai neṟi terintu avaṉum colluvāṉ.