கம்பராமாயணம் 6477 · யுத்த 4.71

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அறிஞரே ஆயினும் அரிய தெவ்வரைச்
செறிஞரே ஆவரேல் கெடுதல் திண்ணமால்;
நெறிதனை நோக்கினும் நிருதர் நிற்பது ஓர்
குறி தனி உளது என உலகம் கொள்ளுமோ?

பொருள் · Meaning in Tamil

அறிஞரே ஆயினும் - அவர் கற்றறிந்த அறிஞர்களே ஆனாலும்; அரியதெவ்வரை - நம்புவதற்கரிய பகைவர்களை; செறிஞரே ஆவரேல் - சேர்ந்தவர் ஆவார் என்றால்; கெடுதல் திண்ணமாம் - அவர்களைச் சேர்த்துக் கொண்டவர்கள் கெடுவது உறுதியாகும்; நெறிதனை நோக்கினும் - வீடணனுடைய அற நெறியை ஆராய்ந்தாலும்; நிருதர் நிற்பதோர் குறி - அரக்கர்கள் நிற்பதாகிய ஒரு குறிக்கோளான அற நெறி; நனி உளது என - மிக உள்ளது என்று; உலகம் கொள்ளுமோ - உலகம் ஏற்றுக் கொள்ளுமோ?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Even the wise, if they draw close to enemies
  2. hard to trust, are certain to come to ruin;
  3. and even if we look at his conduct, will the world accept
  4. that rākṣasas truly have any goal of righteousness to stand by?"

What the poem says

Cāmpaṉ begins with a maxim: even learned people are ruined if they take in enemies who cannot be trusted.

Even if Vīṭaṇaṉ's own conduct seems righteous, he asks, will anyone believe that a rākṣasa holds firmly to dharma? So Cāmpaṉ too leans towards caution.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṟiñarē āyiṉum ariya tevvaraic
ceṟiñarē āvarēl keṭutal tiṇṇamām;
neṟitaṉai nōkkiṉum nirutar niṟpatu ōr
kuṟi naṉi uḷatu eṉa ulakam koḷḷumō?