கம்பராமாயணம் 6478 · யுத்த 4.72

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வெற்றியும் தருகுவர் - வீடணனைப் போன்றவர்களை நம்முடன் சேர்த்துக் கொண்டால் வெற்றி தேடித்தரலாம்; வினையம் வேண்டுவர் - நமக்குத் தேவையான யோசனைகளையும் கூறுவர்; முற்றுவர் - நமது காரியங்களை முடித்தும் தருவர்; உறு குறை முடிப்பர் - வேறு ஏதேனும் குறைகள் இருந்தாலும் அதை மாற்றி நலம் புரிவர்; முன்பினால் - (ஆனால்) முன்பிருந்தே; உற்றுறு நெடும் பகை உடையர் - நம்முடன் அரக்கர்கள் பெரிய பகை உடையவராவர்; அல்லதூஉம் - அதுவும் அல்லாமல்; சிற்றினத்தவரொடும் - இவர்களை ஒத்த சிற்றினத்தவருடன்; செறிதல் சீரிதோ? - சேர்தல் சிறப்புடையதாகுமோ?

வினயம் - உபாயம் (யோசனைகள்). முற்றுதல் - நிறைவேற்றுதல். உற்றுறு நெடும்பகை - தொடர்ந்து வரும் நெடும்பகை. "சிற்றினம் அஞ்சும் பெருமை” என்ற குறள் (451) நினைவு கூரத்தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "They may bring victory; they may offer the stratagems we need;
  2. they may carry our tasks through; they may remedy any lack —
  3. yet from of old they bear a long and deep enmity towards us; and besides,
  4. is it fitting to keep close company with the base?"

What the poem says

Cāmpaṉ admits the possible benefits of taking Vīṭaṇaṉ in: he might help them win, give useful advice, and accomplish their aims.

But the rākṣasas have long been their enemies, and the wise avoid the company of low people. The commentary recalls the Tirukkuṟaḷ (451), which says greatness shrinks from base company.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veṟṟiyum tarukuvar; viṉaiyam vēṇṭuvar
muṟṟuvar; uṟu kuṟai muṭippar muṉpiṉāl;
uṟṟuṟu neṭum pakai uṭaiyar; allatūum
ciṟṟiṉattavaroṭum ceṟital cīritō?