கம்பராமாயணம் 6479 · யுத்த 4.73

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வேதமும் வேள்வியும் மயக்கி - வேதங்களையும் வேள்விகளையும் நடைபெற விடாமல் கெடுத்து; வேதியர்க்கு ஏதமும் - வேதம் வல்ல அந்தணர்களுக்குத் துன்பத்தையும்; இமையவருக்கு இடரும் - தேவர்களுக்குத் தொல்லையும்; ஈட்டிய பாதகர் - தொடர்ந்து செய்து வந்த கொடிய பாதகர்களாகிய அரக்கர்; நம்வயின் படர்வராம் - நமது பக்கம் சேர்வார்கள் என்றால்; தீது இலராய் - நமக்குத் தீமை செய்யாதவர்களாய்; நமக்கு அன்புசெய்வரோ - நம்மிடம் அன்புடையவர் ஆவரோ?

வேதங்களை ஓதாமலும் வேள்விகளை நடத்தாமலும் அந்தணர்களுக்கும் முனிவர்க்கும் இடையூறு செய்தனர் என்பதை 'அரக்கர் என்றுளர் சிலர் அறத்தின் நீங்கினார் நெருக்கவும் யாம்படர் நெறியலாநெறி துரக்கவும் அருந்தவத்துறையுள் நீங்கினோம் (அகத்தியப்படலம் /2) என முனிவர்கள் இராமன்பால் முறையிட்டமையால் அறியலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Those wicked ones who confounded the Vedas and the sacrifices,
  2. who heaped harm upon the Brahmins and distress upon the gods —
  3. if such sinners should come over to our side,
  4. would they be free of malice and show us love?"

What the poem says

Cāmpaṉ recalls the rākṣasas' record: they disrupted Vedic recitation and sacrifice and tormented Brahmins and gods alike.

The commentary cites an earlier episode in which the forest sages complained to Irāmaṉ that rākṣasas had driven them from their hermitages. People with such a history, Cāmpaṉ argues, are unlikely to become loving friends.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vētamum vēḷviyum mayakki vētiyarkku
ētamum imaiyavarkku iṭarum īṭṭiya
pātakar namvayiṉ paṭarvarām eṉiṉ
tītu ilarāy namakku aṉpu ceyvarō?