கம்பராமாயணம் 648 · பால 10.96
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நிற்கு - உனக்கு; இது - இப் பசு; தகுவது அன்று - தகுதியுடையது அன்று; ஆல் - (அதனால்); நீடு அரும் - சிறப்பு மிக்க; சுரபி தன்னை - இக் காமதேனுவை; எற்கு அருள் - எனக்குக் கொடுத்தருளுக; என்றலோடும் - (என்று கௌசிகன்) சொன்ன அளவில்; யாதும் இயம்பலன் - வசிட்டன் (சிறிது நேரம்) ஒன்றும் கூறாதவனாய்; பின்னர் - பின்பு; கொன் கொள் - (பகைவர்க்கு) அச்சம்தரும்; வேல் உழவ - வேற்படையுள்ள அரசே; வற்கலை உடையென் - மரவுரியை ஆடையாக உடைய முனிவனான; யானோ வழங்கலென் - நானோ (இதனை உமக்குக்) கொடுக்கும் உரிமை உடையவன் அல்லன்; வருவது ஆகின் - (அம் பசு உம்மிடம்) வருவதனால்; நீயே கொண்டு - நீரே அழைத்துக் கொண்டு; அகல்க - செல்வீராக; என்று கூற - என்று கூறிய அளவில்.
வற்கலை உடையென் யானோ வழங்கலென் - முனிவர்க்கு அரசர் பசு முதலிய பொருள்களைக் கொடுத்திடுவது மரபேயொழிய முனிவர் அரசர்க்குக் கோதானம் செய்வது தக்கது அன்று என்ற கருத்தும் குறிப்பாக உணரப்படுகிறது. கொல் கொள்வேல் - கொலைத் தொழிலைக் கொண்ட வேல். கொல்லனது உலைக் களத்தில் வடிக்கப்பட்ட வேல். வேல் உழவன்: பகைவரது உடம்பாகிய விளைநிலத்தைத் தனது வேலாகிய கலப்பையைக் கொண்டு உழுது போராகிய பயிரை வளர்த்து வெற்றியாகிய பயனை விளைவிப்பவன். கொன்: அச்சம் (தொல் இடை -6) யானோ: ஓ - இழிவு சிறப்பு. உருவக அணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- '— this is not fitting for you; grant me
- the rare and lasting Curapi.' At these words he said nothing at all; then
- 'I am one who wears bark; I shall not give her; if she will come,
- O ploughman of the killing spear, take her yourself and go,' he said.
What the poem says
The king tells Vaciṭṭaṉ that such a cow is not suited to a hermit and asks him to give it to him. The sage is silent at first, then replies that he, a man clothed in bark, will not make the gift: by custom kings give cows to sages, not the reverse. If the cow is willing to go, the king may take her himself.
He addresses the king as a "ploughman of the spear", a metaphor for the warrior who ploughs the field of his enemies' bodies with his spear and reaps the harvest of victory.