கம்பராமாயணம் 649 · பால 10.97
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(அது கேட்டு) பார்த்திபன் - கௌசிக மன்னவன்; பணித்தது புரிவென் - முனிவன் சொன்ன மொழிப்படியே செய்வேன்; என்னா - என்று; எழுந்து பொங்கி - உற்சாகத்தோடு எழுந்து; சுரபிதன்னை - அந்தக் காமதேனுவை; பிணித்தனன் - பிணித்துக் கொண்டு; பெயர்வுழி - புறப்படும் பொழுது; பிணியை வீட்டி - (அந்தப் பசு) கட்டை அறுத்துக் கொண்டு, வசிட்டனை நோக்கி; மறைகள் யாவும் - வேதங்களை எல்லாம்; கணித்த எம்பெரும - ஆராய்ந்து அளவிட்டு அறிந்த எம்பெருமானே; மணித்தடம் தோளினாற்கு - அழகிய தோள்களையுடைய விசுவாமித்திரனுக்கு; கொடுத்தியோ - என்னை அளித்து விட்டாயோ; என்ன - என்று கேட்க; கலை மறை முனிவன் - தருமநூல் முதலிய கலைகளையும் வேதங்களையும் அறிந்த வசிட்டன்; சொல்வான் - விடை கூறுபவன் ஆனான்.
வீட்டுதல்: விடுவித்தல். மணி: கருவியாகு பெயர் (இரத்தின அணிகள்). வேதம் வல்ல அந்தணன் அரசனுக்குக் கோதானம் புரிதல் தகாது என்பது புலப்பட நின்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Saying, 'I shall do as you bid,' the king rose in eagerness
- and tied up Curapi; as he moved off, she broke the tether
- and said, 'Have you given me to the man of jewelled broad shoulders,
- my lord who has measured all the Vedas?' and the sage of the Vedas and sciences replied.
What the poem says
Taking the sage at his word, King Kaucikaṉ eagerly ties up the cow and starts to lead her away. But Curapi breaks her tether and runs back to Vaciṭṭaṉ, asking whether he has really given her to this king with jewelled shoulders. The sage begins to answer in the next verse.