கம்பராமாயணம் 650 · பால 10.98
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
யானே கொடுத்திலென் - (உனது உடன்பாடு இல்லாமல்) உன்னை நானே கௌசிகனுக்குக் கொடுக்கவில்லை; இக் குடை கெழு - வெற்றிக் குடையுடைய; வேந்தன் தானே - அவ்வரசனே (உன்னை); பிடித்து அகல்வுற்றது - பிடித்துக் கொண்டு போகத் தொடங்கிய செயல் இது; என்ன - என்று முனிவன் விடை கூற; (அது கேட்டு); பெருஞ் சினம் - (அப்பசு) பெருங்கோபம்; கதுவும் நெஞ்சோடு - கொண்ட மனத்தோடு; இடித்து எழும் முரசம் - இடியை ஒத்து எழுகிற ஓசையுடைய முரசங்களை; வேந்தன் சேனையை - கொண்ட இவ்வரசனது படைகளை; யானே இன்று முடிக்குவென் - நானே இன்று அழித்துவிடுவேன்; காண்டி என்னா - (அதைக்) காண்பாயாக என்று சபதமிட்டு; அன்றே மொய்ம்மயிர் சிலிர்த்தது - அப்பொழுதே அடர்ந்த தன் உடம்பின் மயிர்களைச் சிலிர்த்தது.
அகல்வுற்றது: தொழிற்பெயர். 'வருவதாகில் கோவைக் கொண்டு அகல்க' என்றதால் 'நான் கொடுக்கவில்லை; வேந்தனே உன்னைக் கொண்டு அகல்வுற்றான்' என்பது பெறப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'I did not give you; it is this king with his parasol
- who seized you and set off,' he said; and with a heart gripped by great rage
- she said, 'I myself will finish off today the army of this king
- whose drums roar like thunder — watch!' and at once her thick hair bristled.
What the poem says
Vaciṭṭaṉ tells the cow he did not give her away; the king is simply taking her by force. Enraged, Curapi vows to destroy the whole army of this king with his thundering war drums, and the hair on her body stands on end.