கம்பராமாயணம் 651 · பால 10.99

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பப்பரர் எயினர் சீனர் சோனகர் முதல பல்லோர்,
கை படை அதனினோடும் கபிலை மாட்டு உதித்து, வேந்தன்
துப்பு உடைச் சேனை யாவும் தொலைவு உறத் துணித்தலோடும்,
வெப்பு உடைக் கொடிய மன்னன் தனயர்கள் வெகுண்டு மிக்கார்.

பொருள் · Meaning in Tamil

(அங்ஙனம் காமதேனு மயிரைச் சிலிர்த்தவுடனே) பப்பரர் - பப்பரர்களும்; யவனர் - யவன தேசத்தார்களும்; சீனர் - சீனர்களும்; சோனகர் - சோனகர்களும்; முதல - முதலான; பல்லோர் - மிலேச்ச வீரர்கள் பலர்; கைப்படை அதனினோடும் - கைகளில் ஆயுதங்களோடும்; கபிலை மாட்டு உதித்து - அப் பசுவினிடம் தோன்றி; வேந்தன் துப்பு உடை - அக் கௌசிக மன்னனுடைய வலிமையுள்ள; சேனை யாவும் - படைகளையெல்லாம்; தொலைவு உற - அழியும்படி; துணித்தலோடும் - கண்ட துண்டங்களாக்கின அளவிலே; வெப்பு உடை - (இயற்கையில்) சினம் கொண்ட; கொடிய மன்னன் தனயர்கள் - கொடியவர்களாகிய கௌசிக மன்னனுடைய மைந்தர்கள்; வெகுண்டு மிக்கார் - கோபித்துத் தாக்கலானார்கள்.

பப்பரம், சீனம், சோனகம் - மிலேச்ச சாதி பேதங்கள் - விளங்காத வேற்றுமொழிகள் பேசுகின்ற புற நாட்டவர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Barbaras, Yavanas, Chinese, Cōṉakas and many more
  2. sprang from the tawny cow with weapons in their hands,
  3. and when they had hacked the king's strong army to destruction,
  4. the cruel king's hot-tempered sons rose up in fury.

What the poem says

From the bristling body of the cow spring hosts of armed foreign warriors — Barbaras, Yavanas (Greeks), Chinese, Cōṉakas (Arabs) and others, peoples who in the commentator's words speak strange tongues from beyond the land. They cut King Kaucikaṉ's army to pieces.

Seeing this, the king's sons, fierce by nature, attack in anger.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1papparar yavaṉar cīṉar cōṉakar mutala pallōr,
kaippaṭai ataṉiṉōṭum kapilaimāṭṭu utittu, vēntaṉ
tuppuṭaic cēṉai yāvum tolaivuṟat tuṇittalōṭum,
veppuṭaik koṭiya maṉṉaṉ taṉayarkaḷ vekuṇṭu mikkār.