கம்பராமாயணம் 652 · பால 10.100

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'சுரபியின் வலி இது அன்று, ஆல்; சுருதி நூல் உணர வல்ல
வரமுனி வஞ்சம்' என்னா, 'மற்றவன் சிரத்தை இன்னே
அரிகுவம்' என்னப் பொங்கி அடர்த்தனர், அடர, அன்னான்
எரி எழ விழித்தலோடும், இறந்தனர் குமரர் எல்லாம்.

பொருள் · Meaning in Tamil

சினம் மிக்க கோசிக குமாரர்கள்; இது - இவ்வாறு பசுவினிடம் மிலேச்சர் தோன்றி நமது சேனையை அழித்தது; சுரபி தன் வலியன்று - காமதேனுவின் வலிமையல்ல; சுருதி நூல் உணர வல்ல - வேதக் கலைகளை அறியவல்ல; வரமுனி - வரம் பெற்ற வசிட்ட முனிவனது; வஞ்சம் என்னா - வஞ்சகச் செயலாகும் என்று சொல்லி; அவன் சிரத்தை - அம் முனிவனது தலையை; இன்னே அரிகுதும் - இப்பொழுதே அறுத்திடுவோம்; என்ன - என்று வீரமொழி கூறி; பொங்கி - சினந்து எழுந்து; அடர்த்தனர் - எதிர்த்து நெருக்கினார்கள்; அடர - அவ்வாறு நெருக்க (அப்போது); அன்னான் - அவ் வசிட்ட முனிவன்; எரி எழ விழித்தலோடும் - தீப்பொறி பறக்கும்படி கண்களால் விழித்துப் பார்த்த அளவிலே; குமரர் எல்லாம் - விசுவாமித்திரன் குமாரர் யாவரும்; இறந்தனர் - மடிந்தொழிந்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'This is not Curapi's strength; it is the trickery of the boon-blessed sage
  2. who can understand the Vedic texts,' they said, 'and now his head
  3. we will cut off at once,' and surging up they pressed upon him; as they pressed,
  4. he glared with eyes that shot out fire, and all the princes died.

What the poem says

The king's sons decide that the destruction is not the cow's power but a trick of the sage, and they rush at Vaciṭṭaṉ swearing to cut off his head. He simply looks at them with eyes blazing fire, and all of them fall dead.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'curapitaṉ vali itu aṉṟāl; curuti nūl uṇara valla
vara muṉi vañcam' eṉṉā, 'maṟṟu avaṉ cirattai iṉṉē
arikuvam' eṉṉap poṅki aṭarttaṉar, aṭara, aṉṉāṉ
eri eḻa viḻittalōṭum, iṟantaṉar kumarar ellām.