கம்பராமாயணம் 6481 · யுத்த 4.75

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'மேல் நனி விளைவது விளம்பல் வேண்டுமோ?
கானகத்து இறைவியோடு உறையும் காலையில்
மான் என வந்தவன் வரவை மானும் இவ்
ஏனையன் வரவும்'என்று இனைய கூறினான்.

பொருள் · Meaning in Tamil

மேல் நனி விளைவது - இந்த வீடணனை நம் பக்கம் சேர்த்தோம் என்றால் அதனால் இனிமேல் ஏற்படும் விளைவின் தீயவிளைவை; விளம்ப வேண்டுமோ - நான் சொல்ல வேண்டுமோ? கானகத்து இறைவியோடு உறையும் காலையில் - கானகத்திலே சீதாதேவியுடன் நீங்கள் வசிக்கின்ற காலத்தே; மான் என வந்தவன் வரவை - பொன்மானாக வந்தவனான மாரீசனுடைய வருகையை; இவ்வேனையன் வரவும் மானும் - இந்த வேற்று வடிவினனான வீடணன் வருகையும் ஒக்கும்; என்று இனைய கூறினான் - என்று இத்தகைய சொற்களைச் சாம்பன் கூறினான்.

மேல் - இனிமேல். ஏனையன் - வேற்றான் (மற்றவன்). மானும் - ஒக்கும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Need I spell out what will come of it hereafter?
  2. When you dwelt in the forest with your queen,
  3. one came to you as a deer: the coming of this other
  4. is just like that coming." Such were the words he spoke.

What the poem says

Cāmpaṉ closes by comparing Vīṭaṇaṉ's arrival with that of Mārīcaṉ, who came to Irāmaṉ and Cītai in the forest disguised as a golden deer and so made her abduction possible.

Note the wordplay: "mān" means deer, and "māṉum" means "is like". This rākṣasa too, he warns, may be a deception in friendly form.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'mēl naṉi viḷaivatu viḷampa vēṇṭumō?
kāṉakattu iṟaiviyōṭu uṟaiyum kālaiyil
māṉ eṉa vantavaṉ varavai māṉum iv
ēṉaiyaṉ varavum' eṉṟu iṉaiya kūṟiṉāṉ.