கம்பராமாயணம் 6482 · யுத்த 4.76
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பால்வரு பனுவலின் துணிவு பற்றிய - பலவகைப்பட்ட நூல்களின் துணிந்த முடிபுகளை அறிந்த; சால்பெருங் கேள்வியன் - சிறந்த பெரிய நூல்களை எல்லாம் அவைகளைக் கற்றறிந்தவர்களிடம் கேட்டு அறிந்த கேள்வி ஞானம் மிக்கவனும்; தானை நாயகன் நீலனை - வானர சேனையின் தலைவனுமான நீலனை; நின் கருத்து இயம்பு நீ என - உனது கருத்து யாதெனக் கூறு என்று; மேலவன் விளம்பலும் - மேலோனாகிய இராமபிரான் கேட்டதும்; விளம்பல் மேயினான் - நீலன் கூற முற்பட்டான்.
நூல்கள் பலவகைப்பட்டிருப்பன. ஆதலால் 'பால்வருபனுவல்' என்றார். பல சிறந்த நூல்களைக் கற்றறிந்த சான்றோர்களிடம் அவைகளைக் கேட்டறிந்த கேள்வி ஞானம் மிகுந்த நீலனை 'சாலப்பெரும் கேள்வியன்' என்றது கருதத்தக்கதாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To the one who had grasped the settled conclusions of the many kinds of treatise,
- a man of vast and excellent learning, the commander of the army,
- Nīlaṉ, the exalted one said, "Tell us your view,"
- and as soon as he had spoken, Nīlaṉ set about speaking.
What the poem says
Irāmaṉ now asks Nīlaṉ, commander-in-chief of the monkey army, for his opinion.
Nīlaṉ is praised for knowing the firm conclusions of many branches of learning and for wide "hearing", that is, knowledge gained by listening to learned teachers explain the great texts.