கம்பராமாயணம் 6486 · யுத்த 4.80

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அடுத்தநாட்டு அரசியல் உடைய ஆணையால்
படுத்தவர் நட்டவர், பகைஞரோடு ஒரு
மடக்கொடி திறத்திடை வைத்த சிந்தையர்,
உடன்கொளத் தகையர், நம் உழை வந்து ஒன்றினால்.

பொருள் · Meaning in Tamil

அடுத்த நாட்டு அரசியலுடைய - அடுத்த நாட்டு அரசனுடைய; ஆணையால் படுத்தவர் நட்டவர் - ஆணையாலே சிறைப்படுத்தப் பட்டவர்களின் நண்பர்களும்; பகைஞரோடு - பகைவர்களுடனே; ஒரு மடக்கொடி பயந்தவர்மைந்தர் ஆயினும் - ஒரு பெண் பெற்றவரின் மக்களே என்றாலும்; நம் முழை வந்து ஒன்றினால் - நம்மிடம் வந்து நம்முடன் சேர்ந்தால்; உடன் கொளத்தகையர் - உடன் சேர்த்துக் கொள்ளத்தக்கவரே ஆவர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Friends of those struck down by the command of the neighbouring kingdom's ruler —
  2. these, and even sons born of the same
  3. tender woman as our enemies,
  4. are fit to be taken in, if they come to us and join us."

What the poem says

Nīlaṉ finishes his list. The friends of those imprisoned or punished by a neighbouring king may be accepted, and even men born of the same mother as the enemy, if they come over and truly join.

That last case fits Vīṭaṇaṉ, Irāvaṇaṉ's own brother, so Nīlaṉ's survey of the rules leans towards accepting him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṭutta nāṭṭu araciyal uṭaiya āṇaiyāl
paṭuttavar naṭṭavar, pakaiñarōṭu oru
maṭakkoṭi payantavar maintar āyiṉum,
uṭaṉ koḷat takaiyar, nammuḻai vantu oṉṟiṉāl.