கம்பராமாயணம் 6488 · யுத்த 4.82
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காலமே நோக்கினும் - இந்த வீடணன் நம்முடன் சேர வந்திருக்கும் சமயத்தை ஆராய்ந்தாலும்; கற்ற நூல்களின் மூலமே நோக்கினும் - நாம் கற்ற நீதி நூல்களின் மூலம் ஆராய்ந்து பார்த்தாலும்; முனிந்து போந்தவன் - அண்ணனாகிய இராவணனுடன் கோபித்து வந்தவனான இவனது; சீலமே நோக்கி - நல்லொழுக்கத்தை மட்டும் பார்த்து; யாம் தெரிந்து தேறுதற்கு ஏலுமே - நாம் இவன் பற்றி ஆராய்ந்து தேற இயலுமோ? (இயலாது என்பது கருத்து.) என்று எடுத்து இனைய கூறினான் - என்று இவ்வாறு எடுத்துரைத்தான் சேனைத்தலைவன்.
தெரிந்து தேறுதற்கு ஏறுமே என்பதில் ஏகாரம் எதிர்மறை. ஏலாது என்பது பொருள். போர் மூண்ட காலத்தில் அண்ணனை விட்டு விலகியவன் என்பதை "காலமே நோக்கினும்” என்றார். 'நூல்களின் மூலம்' நூல்களின் அடிப்படையில் ஆய்ந்தாலும் என்பது பொருள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Whether we look at the timing, or look
- to the foundations of the treatises we have learned,
- can we, judging only by the good conduct of one who left in anger,
- examine him and trust him?" So he set out these words.
What the poem says
Nīlaṉ concludes. Vīṭaṇaṉ has left his brother just as war breaks out, and the books of statecraft warn against trusting such a defector.
The question "can we trust him?" expects the answer no. A person's seemingly good character alone is not enough to rely on in such circumstances.