கம்பராமாயணம் 6489 · யுத்த 4.83

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மற்றுள மந்திரக் கிழவர் - வானரப்படையில் சுக்கிரீவன் சாம்பன், நீலன் இவர்களைத்தவிர வேறுமுள்ள அமைச்சர் முதலானோர்; வாய்மையால் ன் வாய்மையைக் கடைப்பிடிப்பவர்களாதலால், குற்றமில் கேள்வியர் - குற்றமில்லாத நூற்கேள்வி உடையவர்களும்; அன்பு கூர்ந்தவர் - இராமபிரானிடம் மிகுந்த அன்புடையவர்களுமான அமைச்சர் படைத்தலைவர் முதலான மந்திரக்கிழவர்; பற்றுதல் பழுது என - இந்த வீடணனை நம்முடன் சேர்த்துக் கொள்ளுதல் தவறாகும் என்று; பழுதுறா ஒரு பெற்றியின் - குற்றமற்ற ஒத்த ஒரேதன்மையான; உணர்வினார் - உணர்வுடையவர்களான அவர்கள்; முடியப்பேசினார் - முடிவான தங்கள் கருத்தைக் கூறினர்.

மந்திரக்கிழவர் - ஆலோசனைக்குரிய அமைச்சர் முதலானோர். மந்திரக்கிழவர் அத்தனைபேரும் ஒத்த உணர்வினராக ஒரே தன்மையில் பேசினர் என்பதை பழுதுறா ஒரு பெற்றியின் என்றார். வீடணனை நம்முடன் சேர்த்துக் கொள்ளுதல் பெருந்தீங்காக முடியும் என்பதே முடிவான கருத்தாகப் பேசினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The other counsellors too, steadfast in truth,
  2. of faultless learning and full of love for him,
  3. being all of one flawless mind, saying, "To take him in is a mistake,"
  4. spoke out their final judgement.

What the poem says

The rest of the council, ministers and captains devoted to Irāmaṉ, agree with Cukkirīvaṉ, Cāmpaṉ and Nīlaṉ.

All of them, speaking with one mind, declare that accepting Vīṭaṇaṉ would be a grave mistake. The poet stresses their honesty and goodwill: they are wrong, but not malicious.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṟṟuḷa mantirak kiḻavar vāymaiyāl
kuṟṟam il kēḷviyar aṉpu kūrntavar
'paṟṟutal paḻutu' eṉap paḻutu uṟā oru
peṟṟiyiṉ uṇarviṉār muṭiyap pēciṉār.