கம்பராமாயணம் 6490 · யுத்த 4.84

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'உறுபொருள் யாவரும் ஒன்றக் கூறினார்;
செறிபெருங் கேள்வியாய்! கருத்து என் செப்பு'என
நெறிதெரி மாருதி என்னும் நேரிலா
அறிவனை நோக்கினான் அறிவின் மேலுளான்.

பொருள் · Meaning in Tamil

அறிவின் மேலுளான் - அறிவுக்கு மேலாக அறிவாக விளங்கும் இராமபிரான்; உறுபொருள் யாவரும் - வீடணனை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்ற பொருளைப் பற்றி எல்லோரும் ஒரே தன்மையாகக் கூறினார்கள்; செறிபெருங் கேள்வியாய் - செறிந்த நிறைந்த கேள்விச்செல்வம் உடையவனே! கருத்து என் செப்பு என - உனது கருத்து யாது கூறுக என்று கேட்டு; நெறி தருமாருதி என்னும் - நன்னெறியில் நிற்கும் மாருதி என்ற; நேரிலா அறிவனை - எவரும் நிகர் கூற இயலாத அறிவு கொண்டவனை; நோக்கினான் - இராமபிரான் குறிப்பாகப் பார்த்தான்.

அறிவுக்கு மேல் அறிவாக இருப்பவன். உயிர்களின் அறிவு கொண்டு அறிய இயலாதபடி மேலோங்கி விளங்குபவன் என்பதால் இராமபிரானை "அறிவின் மேலுளான்” என்றார். அறிவின் மேலுளான் அறிவனை நோக்கினான் என்ற கவிநயம் கருதத்தக்கது. உறுபொருள் - உற்றபொருள். உறு என்னும் உரிச்சொல் மிகுதி என்னும் பொருள் உடையது. ஆகையால் மேற்கொள்ளுதற்கு மிகுதியும் உரியபொருள் என்பது கருத்து. அநுமனுக்கு நிகராக வேறு எவருமில்லை என்பதால் "நேரிலா அறிவன்" என்றார். 'நெறிதருமாருதி' நீதி நெறி தெரிந்த அனுமனைக் குறிப்பதாகும். எல்லோரும் ஒரே கருத்தினராக 'பற்றுதல் பழுது' என்றுகூறினார். நின் கருத்து யாது? என இராமபிரான் அனுமனைக் கேட்டான் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "All have spoken as one on the matter before us;
  2. O you of dense and vast learning, tell me your view." With this,
  3. the one who is above all knowing looked towards the peerless
  4. knower called Māruti, who shows the right path.

What the poem says

With every counsellor against Vīṭaṇaṉ, Irāmaṉ turns to Aṉumaṉ, son of the Wind (Māruti), and asks his opinion.

The poet sets two phrases side by side: Irāmaṉ, "the one above knowledge", whom no creature's mind can fully grasp, looks at Aṉumaṉ, "the knower" without equal. Aṉumaṉ has already been inside Ilaṅkai and met Vīṭaṇaṉ's household, so his view matters.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'uṟu poruḷ yāvarum oṉṟak kūṟiṉār;
ceṟi peruṅ kēḷviyāy! karuttu eṉ ceppu' eṉa
neṟi taru māruti eṉṉum nēr ilā
aṟivaṉai nōkkiṉāṉ aṟiviṉ mēl uḷāṉ.