கம்பராமாயணம் 6491 · யுத்த 4.85

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'இணங்கினர் அறிவிலர் எனினும் எண்ணுங்கால்
கணங்கொளல் நும்மனோர் கடன்மை காண்'எனா
வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன்
நுணங்கிய கேள்வியன் நுவல்வ தாயினான்.

பொருள் · Meaning in Tamil

இணங்கினர் அறிவிலர் எனினும் - நம்மை அடைக்கலமாக வந்து அடைந்தவர்கள் அறிவில்லாதவர் என்றாலும்; எண்ணுங்கால் - நினைத்துப் பார்த்தால், கணம் கொள்கை - அவர்களை இனமாகக் கொண்டு சிறப்பித்தல்; நும்மனோர் கடன்மை காண்என - உங்களைப் போன்றவர்களுக்கு உரிய கடமையாகும் என்று; வணங்கிய சென்னியன் - வணங்கிய தலையை உடையவனாகவும்; மறைத்த வாயினன் - கைகளால் மறைத்த வாயினை உடையவனாகவும்; நுணங்கி கேள்வியன் - நுணுக்கமான கேள்விஞானம் உடையவனான அனுமன்; நுவல்வதாயினான் - சொல்லுவானானான்.

நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது என்ற குறள் (419) நெறிக்கேற்ப அமைந்தவன் அனுமன் ஆகலால் அனுமனை 'நுணங்கியகேள்வியன் வணங்கிய வாயினன்' என்றார். ஒரு புறாவுக்கு அடைக்கலம் தந்து காத்த சிபி பிறந்த சூரிய குலத்தில் தோன்றிய உன்னைப் போன்றவர்களுக்கு உரியதொரு கடமை என்பதனை 'நும்மனோர் கடன்மை” என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Even if those who seek to join us are without wisdom, when one considers it,
  2. to take them in as one's own is the duty of such as you" — so,
  3. with his head bowed and his mouth covered with his hand,
  4. the one of subtle learning began to speak.

What the poem says

Aṉumaṉ begins, head bowed and hand over his mouth in the respectful posture of a servant addressing his lord. His opening principle: even if those who seek refuge are foolish, it is the duty of a king like Irāmaṉ to accept them.

The commentary links this to the Tirukkuṟaḷ (419): only those of deep learning speak with humble mouths. "Such as you" recalls the Solar dynasty, which includes King Śibi, who gave his own flesh to save a dove that had sought his protection.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iṇaṅkiṉar aṟivilar eṉiṉum eṇṇuṅkāl
kaṇam koḷkai nummaṉōr kaṭaṉmaikāṇ' eṉa
vaṇaṅkiya ceṉṉiyaṉ maṟaitta vāyiṉaṉ
nuṇaṅkiya kēḷviyaṉ nuvalvatāyiṉāṉ.