கம்பராமாயணம் 6492 · யுத்த 4.86
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வித்தக - பேரறிவுடைய மேலோனே! தெரிந்து எண்ண ஏய்ந்தவர் - ஆராய்ந்து நினைந்து கூறவல்லவர்கள்; எத்தனை உளர் - இங்கு எத்தனை பேர் இருக்கிறார்களோ; அத்தனைவரும் - அத்தனை பேரும் ஒத்த கருத்தினராக; ஒரு பொருளை - நாம் கைக்கொள்ளத்தக்க தொன்றை; அன்று என - கொள்ளத்தக்க தன்று என்று; உத்தமர் - உத்தமமான குணமுடைய அவர்கள்; அது தெரிந்து உணர ஓதினார் - சொல்லவேண்டிய அதனை நன்கு தெரிந்து உணரும்படி கூறினர்; இனி சில விளம்ப வேண்டுமோ - நானும் இனிச் சிலவற்றைச் சொல்லியாக வேண்டுமோ?
சுக்ரீவன் முதலிய அத்தனை பேரும் சிந்தித்துக் கூறத்தக்கவர்களே என்பதனை "தெரிந்து எண்ண ஏய்ந்தவர்" என்றான். அவர்கள் தெரிவித்த கருத்தினின்று மாறுபட்ட கருத்தினைக் கூறப்போகின்றான். எனினும், இராமபிரானிடத்து பேரன்பு கொண்டவர்கள் ஆதலின் அவர்கள் மிகுந்த மதிப்புக்குள்ளவர்கள் எனப் போற்றிப் பேசும் அனுமனின் உயர்வும் பணிவும் குறிக்கத்தக்கன. தெரிந்து - ஆராய்ந்து. அத்தனைவரும் - அந்த அனைவரும். உத்தமர் - நல்ல இயல்புடையவர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "However many there are here who are fit to weigh and judge,
- all of them, as one, have said of this matter, 'It is not right,'
- and those noble ones have explained it so it may be clearly understood;
- O wise one, is there any need for me to add more?"
What the poem says
Aṉumaṉ is about to disagree with everyone, but he does so with tact. He first praises the other counsellors as discerning, noble, and devoted to Irāmaṉ.
His modest question, "need I say anything more?", is a courteous lead-in to a different opinion. The commentary admires the combination of greatness and humility in him.