கம்பராமாயணம் 6493 · யுத்த 4.87

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'தூயவர் துணிதிறன் நன்று தூயதே;
ஆயினும் ஒரு பொருள் உரைப்பன் ஆழியாய்!
"தீயன்" என்று இவனை யான் அயிர்த்தல் செய்கிலேன்;
மேயின சில பொருள் விளம்ப வேண்டுமால்.

பொருள் · Meaning in Tamil

ஆழியாய் - சக்கரப்படையை உடைய திருமாலின் அவதாரமாக விளங்கியவனே! தூயவர் துணி திறன் நன்று - தூய மனமுடைய இவர்கள் எல்லோரும் துணிந்து கூறியவை நல்லதே; தூயதே ஆயினும் - குற்றமற்ற தூய கருத்துக்களே என்றாலும்; ஒரு பொருள் உரைப்பென் - நான் ஒரு கருத்தைக் கூறுகிறேன்; இவனை யான் தீயன் என்று அயிர்த்தல் செய்கிலேன் - இங்கு வந்துள்ள இந்த வீடணனை யான் தீயவன் என்று சிறிதும் சந்தேகப்படமாட்டேன்; மேயின சில பொருள் - அவ்வாறு ஐயப்படாமைக்குக் காரணமான சிலவற்றை, விளம்பவேண்டும் - யான் இப்போது கூறியாக வேண்டும்.

'ஆழியாய்' என்பதற்கு ஆணையாகிய சக்கரத்தை உடையவனே என்பதும் ஒரு பொருளாகும். 'ஒரு பொருள்' என்பது, அவர்களெல்லாம் கூறியதற்கும் வேறான ஒருபொருள் என்னும் குறிப்புடையது. சுக்கிரீவன் முதலிய அத்தனை பேரும் மனத்தால் தூயர் அவர்கள் கொண்ட கருத்தும் நன்று தூயது. தன் கருத்து வேறானது என்பதைத் துணிவுடன் "தீயன் என்று இவனை நான் அயிர்த்தல் செய்திலேன்” என்று தெளிவாகக் கூறினும் சுக்கிரீவன் முதலானோர் தூயர் உத்தமர் என்றெல்லாம் சிறப்பித்துக் கூறும் அனுமன் நிலை உணர்ந்து மகிழ்தற்குரியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The resolve of these pure-hearted ones is good, and it is pure;
  2. and yet I will say one thing, O bearer of the discus:
  3. I do not suspect this man of being wicked;
  4. I must set out a few things that have come to my mind."

What the poem says

Aṉumaṉ now states his own position plainly. His colleagues are sincere and their view is honourable, but he does not believe Vīṭaṇaṉ is wicked, and he will give his reasons.

"Bearer of the discus" points to Irāmaṉ as an incarnation of Viṣṇu, who carries the cakra; the commentary notes it can also mean one whose rule is a wheel of command.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tūyavar tuṇi tiṟaṉ naṉṟu tūyatē;
āyiṉum oru poruḷ uraippeṉ āḻiyāy!
"tīyaṉ" eṉṟu ivaṉai yāṉ ayirttal ceykilēṉ;
mēyiṉa cila poruḷ viḷampa vēṇṭumāl.