கம்பராமாயணம் 6494 · யுத்த 4.88

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வண்டு உளர் அலங்கலாய்! வஞ்சர் வாள்முகம்
கண்டதோர் பொழுதினில் தெரியும்; கைதவம்
உண்டு எனின் அஃது அவர்க்கு ஒளிக்க ஒண்ணுமோ?
விண்டவர் நம்புகல் விரும்பி வீழ்வரோ?

பொருள் · Meaning in Tamil

வண்டு உளர் அலங்கலாய் - வண்டுகள் கிளறுகின்ற மலர் மாலை அணிந்துள்ள பெருமானே! வஞ்சர் வாள்முகம் - வஞ்சக எண்ணமுடையவர்களின் ஒளி பொருந்திய முகத்தை; கண்டதோர் பொழுதினில் - பார்த்த அந்த நேரத்திலே; தெரியும் - நன்றாகத்தெரிந்து கொள்ளலாம்; கைதவம் உண்டெனில் - உள்ளத்தே வஞ்சகம் இருக்குமானால்; அஃது அவர்க்கு ஒளிக்க ஒண்ணுமோ - அதனை அவர்களால் புறத்தே தோன்றாமல் ஒளிக்க இயலுமோ? விண்டவர்நம் புகல் - பகைவர்கள் நம்மை அடைக்கலமாக; மருவி வீழ்வரோ - அடைந்து தாழ்தலை விரும்புவார்களோ?

வஞ்சகர் முகத்தைப் பார்த்த போதே தெரியும் என்பான் "வஞ்சர் வாள்முகம் கண்டதோர் பொழுதினில் தெரியும்” என்றான். வாள் (ஒளி) முகம் என்றது, வஞ்சகர் போலித்தனமாகக் காட்டக்கூடிய காட்சியை உணர்த்திற்று. வஞ்சகத்தை அவர்களால் மறைக்க முடியாதென்பதை 'கைதவம் ஆயினும் உண்டெனில் அஃது அவர்க்கு ஒளிக்க ஒண்ணுமோ என்றான். பகைவர் நம்மைப் புகல் அடைந்து தாழ்வதை விரும்பமாட்டார்கள் என்பது மாருதியின் வாதம். கைதவம் - வஞ்சகம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "O you whose garland the bees stir! The bright face of the deceitful
  2. shows its truth the moment one sees it; if there is guile within,
  3. can they hide it from view?
  4. Would true enemies come and fall at our feet seeking refuge?"

What the poem says

Aṉumaṉ's first argument: treachery shows on the face. However bright and pleasant a deceiver's face looks, guile within cannot be fully hidden, and they will be seen through at once.

Second, a real enemy would not humble himself by coming to throw himself on their mercy. Pride alone would stop him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vaṇṭu uḷar alaṅkalāy! vañcar vāḷ mukam
kaṇṭatu ōr poḻutiṉil teriyum; kaitavam
uṇṭu eṉiṉ aḵtu avarkku oḷikka oṇṇumō?
viṇṭavar nam pukal maruvi vīḻvarō?