கம்பராமாயணம் 6495 · யுத்த 4.89
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உள்ளத்தின் உள்ளதை - மனத்திலே இருப்பதை; உரையின் முந்துற - பேசுவதற்கு முன்னாலேயே, மெள்ளத்தம் முகங்களே விளம்பும் - மெதுவாகத்தமது முகங்களே கூறிவிடும் (காட்டிக்கொடுத்து விடும்); கள்ளத்தின் விளைவு எலாம் - வஞ்சகத்தின் விளைவுகள் எல்லாம்; கருத்து இலா - நல்ல கருத்து இல்லாத; இருள் பள்ளத்தின் அன்றியே - அறியாமையாகிய இருள் நிறைந்த பள்ளம் போன்ற முகம் அல்லாது; வெளியில் பல்குமோ - (அறிவொளி வீசுகின்ற) வெட்டவெளி போன்ற முகத்தில் வெளிப்பட்டுத் தோன்றுமோ?
"அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்” (706) என்ற குறள் ஒப்பு நோக்கத்தக்கது. வஞ்சகர்களின் உள்ளத்தில் உள்ளதை உரைக்குமுன், முகமே உணர்த்திவிடும் என்பதாயிற்று. வஞ்சகத்தின் விளைவு - அறியாமை நிறைந்த இருட்பள்ளம் போன்ற முகத்திலே தோன்றுமேயல்லாது வெட்டவெளி போன்ற முகத்திலே காணப்படுமோ என்றான். கள்ளத்தின் விளைவை இருள் நிறைந்த முகமே காட்டிக் கொடுத்துவிடும் என்பது கருத்தாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "What lies within the heart, even before speech,
- their faces quietly declare; and so,
- would all that springs from deceit show anywhere but in a dark hollow
- without good thought? Would it spread out across an open, clear face?"
What the poem says
Aṉumaṉ develops his point that the face betrays the mind. Before a person speaks, the face already shows what is inside.
The fruits of deceit appear in a face that is like a dark pit, not in one that is open and luminous like clear sky, as Vīṭaṇaṉ's is. The commentary compares the Tirukkuṟaḷ (706): as crystal shows the colour of what is near it, the face shows what the heart feels.