கம்பராமாயணம் 6497 · யுத்த 4.91
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
செறிகழல் அரக்கர்தம் அரசு - செறிந்த கழலணிந்த கால்களையுடைய இவ்வரக்கர்களின் அரசாட்சி, சீரியோர் நெறி அலது ஆதலின் - சிறந்த மேலோர்கள் கூறிய நெறியில் நடைபெறாதது, ஆதலால், நிலைக்கலாமையும் - அது நிலைபெறாதது என்பதனாலும்; எறிகடல் உலகு எலாம் - திரை எறியும் கடலால் சூழப்பட்ட உலகம் முழுவதையும், இளவற்கு ஈந்ததோர் பிறிவரும் கருணையும் - தம்பியான பரதனுக்குத் தந்தருளிய நீங்காத கருணையையும்; மெய்யும் பேணினான் - நீ மேற்கொண்ட வாய்மை அறத்தையும் இந்த வீடணன் விரும்பியவனாவான்.
அரக்கர்களின் ஆட்சி வன்முறையைக் கொண்டதேயல்லாத நீதி அறம் போன்ற நன்னெறிகளைக் கொண்டதல்லவாதலால் மேலோர் கூறிய நெறிநில்லாத தென்பான். "சீரியோர் நெறி அலது" என்றான். போர் வெற்றிகளால் அமைந்ததாயினும் நன்னெறியில் இயங்காததது அரக்கரின் அரசு; ஆகவே வீடணன் அதனை நிலைபேறுடையதாகக் கருதமாட்டான். ஆட்சியில் பற்றில்லாதவனுக்கு ஆட்சியை வழங்கிய இராமபிரானது பெருங்கருணை வாய்மை இவைகளையே விரும்பி வந்தவன் வீடணன் என்பதனை "உலகெலாம் இளவற்கீந்ததோர் பிறிவருங்கருணையும் மெய்யும் பேணினான்” என்றான். இலங்கை அரசு வீடணனுக்கு வரவிருப்பது உறுதிதான். எனினும், அதனைப் பெரிதாக வீடணன் கருதான் என்பதும் ஆட்சி விருப்பம் இல்லாத பரதனுக்கு அதனை இராமன் அளித்தான் என்பதும் இணைத்து நோக்கத்தக்கவை. இணைத்து நோக்குதலால் விளையும் கருத்துகள் விரிக்கின் பெருகும். 'பிரிவு' எதுகை நோக்கி பிறிவெனப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "The rule of the rākṣasas with their close-set anklets does not follow
- the path of the noble; and so, knowing it cannot last,
- he has cherished your unfailing compassion, which gave the whole
- wave-beaten world to your younger brother, and your truthfulness."
What the poem says
Aṉumaṉ adds that Vīṭaṇaṉ sees Irāvaṇaṉ's kingdom, built on force rather than righteousness, as doomed.
What draws Vīṭaṇaṉ is Irāmaṉ's character: his generosity in handing the whole kingdom of Ayōttī to his younger brother Paratan, and his unswerving truthfulness. The commentary notes the parallel: Paratan did not want the throne, and Vīṭaṇaṉ too does not prize Ilaṅkai, though it will come to him.