கம்பராமாயணம் 6498 · யுத்த 4.92
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
காலம் அன்று இவன் வரும் காலம் என்பரேல் - இவன் இங்கு வந்த காலம் சரியான காலமல்ல என்பார்களானால்; வாலி தன் உறு பகை வலியது ஏறியதால் - வலிமை மிக்கதான வாலியின் பகையைக் கடந்து நின்றது; இனி அங்கு இவற்கு - இனி இலங்கை அரக்கர்களுக்கும்; இறுதி ஆவதால் - அழிவு காலம் ஆயிற்று என்பதால்; மூலம் என் துணைவரை - தனக்கு மூலம் எனப்படும் துணைவர்களான இராவண, கும்பகருணர்களை; பிரிவு முற்றினான் - பிரிந்து வருவதை நிறைவேற்றினான் (எனவே இவன் வந்த காலம் பொருத்தமானதே.
காலமே நோக்கினும் வீடணன் அண்ணனைப் பிரிந்து வந்த காலத்தை ஆராய்ந்தாலும் பொருத்தமான காலமல்ல என்று கூறிய நீலனது கருத்தை (6445) மறுப்பது போல 'காலமன்று என்பரேல்' என்றான். ஏறுதல் - வெல்லுதல் (கடத்தல்). வாலியின் கொடிய பகையை வென்றது நின் வில்வலி என்பான் 'வலியது ஏறியதால்' என்றான். வாலியை வதைத்தவனுக்கு நம்மை அழிப்பது எளிய செயல் ஆகும் என, அவ்வரக்கர்களும் கருதுவர் எனவே அவர்களுக்கு அழியும் காலம் ஆயிற்று என்பான் 'இறுதி ஆவதால்' என்றான். மூலம் என் - மூலம் எனப்படும். முற்றுதல் - செய்துமுடித்தல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "If they say, 'This is no time for him to come' —
- since your strength has overcome the mighty enmity of Vālī,
- and the end has now come for those over there,
- he has carried through his parting from those who were his very root, his kin."
What the poem says
Aṉumaṉ answers Nīlaṉ's objection about timing. Irāmaṉ's bow has already conquered Vālī, who had once defeated Irāvaṇaṉ himself; so the rākṣasas' end is near.
Seeing this, Vīṭaṇaṉ has left his elder brothers, Irāvaṇaṉ and Kumpakaruṇaṉ, the roots of his family. The moment of his coming, Aṉumaṉ argues, is exactly right.