கம்பராமாயணம் 6499 · யுத்த 4.93

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'தீத்தொழில் அரக்கர் தம் மாயச் செய்வினை
வாய்த்துளர் அன்னவை உணரும் மாண்பினால்
காய்த்தவர் அவர்களே கையுற்றார்; நமக்கு
ஏற்றது ஓர் உறுதியும் எளிதின் எய்துமால்.

பொருள் · Meaning in Tamil

தீத்தொழில் அரக்கர் - பாவச்செயல்களை உடைய அரக்கர்; தம் மாயச் செய்வினை வாய்த்துளர் - அவர்களுக்கே உரிய மாயச்செயல்களைப் புரிய வல்லவர்கள்; அன்னவை உணரும் - அவைகளை எல்லாம் தெரிந்து உணர்கின்ற; மாண்பினால் காய்த்தவர் - பெருமையினால் தேர்ந்தவர்களான வீடணனைப் போன்ற; அவர்களே நமக்கு கை உற்றார் - அவர்களே நமது பக்கம் சேர்ந்தார்கள்; ஏத்தரும் உறுதியும் எளிதில் எய்தும் - எனவே போற்றுதற்கரிய வெற்றி நமக்கு எளிதில் கிடைக்கும் எனலாம்.

அரக்கர் மாயம் வல்லவர் ஆதலின் "மாயச்செய்வினை வாய்த்துளார்” என்றான். காய்த்தவர் - தேர்ந்தவர். வீடணனைப் போன்றவர்கள் நமது பக்கம் சேர்வதால் மாயம் வல்ல அரக்கர்களின் மாயம் அறிந்து வெற்றி கொள்ளுதல் எளிய செயலாகும் என்பது தோன்ற "அவர்கள் நமக்குக் கை உற்றார் ஏத்தரும் உறுதியும் எளிதில் எய்தும்” என்றான். 'கை உற்றார் என்பதற்கு நமது கைகளுக்குள் அடங்கியவராயினர்' என்பதும் ஒரு பொருளாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The rākṣasas of evil deeds are skilled in works of sorcery;
  2. and one who, by his excellence, knows all those arts
  3. and is versed in them has now come into our hands;
  4. so a victory beyond praise will come to us with ease."

What the poem says

Aṉumaṉ turns to practical benefit. The rākṣasas fight with magic and illusion. Vīṭaṇaṉ knows all their tricks, and having him on their side will let Irāmaṉ's army see through those illusions.

With such an ally, a glorious victory will come easily. "Come into our hands" can also mean he is now under their control.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tīt toḻil arakkartam māyac cey viṉai
vāyttuḷar aṉṉavai uṇarum māṇpiṉāl
kāyttavar avarkaḷē kaiyuṟṟār; namakku
ētta arum uṟutiyum eḷitiṉ eytumāl.