கம்பராமாயணம் 6500 · யுத்த 4.94

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"'தெளிவு உறல் அரிது இவர் மனத்தின் தீமை; நாம்
விளிவது செய்குவர்" என்ன வேண்டுதல்
ஒளி உற உயர்ந்தவர் ஒப்ப எண்ணலார்
எளியவர் திறத்து இவை எண்ணல் ஏயுமோ?

பொருள் · Meaning in Tamil

தெளிவு உறல் அரிது இவர் மனத்தின் தீமை - இவர்களது மனத்தில் அடங்கியிருக்கும் தீமையைத் தெரிவது அரிய செயல்; விளிவது செய்குவர் - நம்மை இறக்கும்படி செய்துவிடுவார்கள்; என்ன வேண்டுதல் - என்றெல்லாம் கருதுவதும், பேசுவதும் செய்பவர்கள்; ஒளிஉற உயர்ந்தவர் ஒப்ப எண்ணலார் - அறிவுக்குப் பொருந்துமாறு உயர்ந்தவர்களை ஒத்து எண்ணாதவராவர்; எளியவர் திறத்து - நம்மை நாடி வந்த எளியவர்கள் விஷயத்திலே; இவை எண்ணல் ஏயுமோ - இப்படி எல்லாம் நினைப்பது பொருந்துவதாகுமோ?

விளிவது - இறக்குமாறு. ஒளி - அறிவு. 'பாதகர் நம்வயின் படர்வராமெனின் தீதிலராய் நமக்கு அன்பு செய்வரோ' என்று கூறிய சாம்பன் கருத்தை (6436) மறுப்பது போல் அனுமன் இதனைக் கூறினான் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "'The evil in their minds is hard to make out; they will
  2. bring about our death' — to need to say such things
  3. is not how those raised high in understanding think;
  4. is it fitting to think such things about the humble who come to us?"

What the poem says

Aṉumaṉ answers Cāmpaṉ's fear that rākṣasas who come over cannot be trusted and may destroy them.

Truly wise and great people, he says, do not think this way about the weak who come seeking help. Suspecting a humble suppliant of plotting murder is beneath someone of Irāmaṉ's stature.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'teḷivuṟal aritu ivar maṉattiṉ tīmai; yām
viḷivatu ceykuvar" eṉṉa vēṇṭutal
oḷi uṟa uyarntavar oppa eṇṇalār
eḷiyavartiṟattu ivai eṇṇal ēyumō?