கம்பராமாயணம் 654 · பால 10.102

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கடவுளர் படைகள் - (சிறிய அம்புகள் முதல்) தேவர்களின் அத்திரங்கள்; ஈறா - இறுதியாக; கற்றன படைகள் யாவும் - அறிந்து பழகிய ஆயுதங்கள் யாவற்றையும்; விட விட - கௌசிகன் எய்து கொண்டுவர; முனிவன் தண்டம் - வசிட்டனது பிரமதண்டமானது; விழுங்கி - அவற்றையெல்லாம் தன்னுள் கொண்டு; மேல் விளங்கல் - மேன்மை பெற்று விளங்குதலை; காணா - கண்டு; (கோசிகன்); வடவரை வில்லிதன்னை - மேருவை வில்லாகக் கொண்ட உருத்திர மூர்த்தியை, வணங்கினன் - வணங்கி; வழுத்தலோடும் - துதித்த அளவில்; அன்னவன் - அச் சிவபிரான்; (எதிர் தோன்றி); அடல் உறு - வலிமை மிக்க ஒப்பற்ற; படை ஒன்று ஈயா - படை ஒன்றை அளித்துவிட்டு; அகன்றான் - மறைந்தான்.

படை ஒன்று: ஒப்பற்ற படைக் கலங்கள் என்றும் கொள்ளலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As he loosed again and again every weapon he had learned, up to the weapons of the gods,
  2. and saw the sage's staff swallow them and shine on above,
  3. he bowed to him whose bow is the northern mountain and praised him;
  4. and that god gave him a mighty weapon, one without equal, and departed.

What the poem says

King Kaucikaṉ shoots every weapon he knows, ending with the divine missiles, but Vaciṭṭaṉ's staff swallows them all and only shines the brighter. The king then worships Śiva, the god who used Mount Meru as his bow, and Śiva appears and grants him a single matchless weapon before vanishing.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṭavuḷar paṭaikaḷ īṟāk kaṟṟaṉa paṭaikaḷ yāvum,
viṭa viṭa, muṉivaṉ taṇṭam viḻuṅki mēl viḷaṅkal kāṇā,
vaṭavarai villitaṉṉai vaṇaṅkiṉaṉ vaḻuttalōṭum,
aṭal uṟu paṭai oṉṟu īyā aṉṉavaṉ akaṉṟāṉ aṉṟē.