கம்பராமாயணம் 6551 · யுத்த 4.145
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நாயக! நடு இனிப் பகர்வது என்னே - எனது தலைவனே! இடையிலே நான் என்ன சொல்ல இருக்கிறது; நாயினேனை - நாயினும் கடையனான அடியேனை; உடன் உதித்தவர்களோடும் - உனக்குத் தம்பிமார்களாய்ப் பிறந்த பரதன், இலக்குவன், சத்துருக்கன் ஆகியவருடன்; ஒருவன் என்று உரையா நின்றாய் - என்னையும் ஒரு தம்பி என்று கூறினாய்; அடிமையில் சிறந்தேன் என்னா - உனக்கு அடிமை செய்வதில் சிறந்தவன் ஆனேன் என்று கூறி; அயிர்ப்பொடும் அச்சம் நீங்கி - ஐயத்தோடு, அச்சமும் நீங்கப் பெற்றவனாய்; தொடுகழல் செம்பொன் மோலி - இராமபிரான் திருவடிகளில் தொடும் பாதுகைகளாகிய அழகிய மகுடத்தை; சென்னியில் சூட்டிக்கொண்டான் - தனது தலையிலே சூட்டிக்கொண்டான்.
'நின்னொடும் எழுவர் ஆனேம்' என்று இராமபிரான் கூறியதைக் கேட்ட வீடணன், தான் இராமபிரானுக்குத் தொண்டனாய் விட்ட மகிழ்ச்சியில் இராமனை 'நாயக' என்று அழைத்துத் தனது எளிமை தோன்றத்தன்னை 'நாயினேன்' எனக் குறிப்பிட்டான். தான் நினைத்து வந்ததற்கு மேலே உடன் பிறந்தவர்களோடு ஒருவனாக இராமன் கூறியதால் அதுவரை இருந்த ஐயமும் அச்சமும் நீங்கப் பெற்றான் என்பதனால் 'அயிர்ப்பொடும் அச்சம் நீங்கி' என்றார். "அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினன், முடித்தலம் இவை என முடியில் சூடினான்' எனப் பரதனும் இவ்வாறே சூடிக்கொண்டதை முன்பும் (கிளை 130) கூறினார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "What more is there for me to say, O Lord? Me, lower than a dog,
- you have named as one among those born with you;
- I have been exalted in servitude!" So saying, his doubt and fear gone,
- he set upon his head the red-gold crown that touches those feet.
What the poem says
Vīṭaṇaṉ is overwhelmed at being called Irāmaṉ's brother, one with Paratan, Ilakkuvaṉ and Catturukkaṉ. Calling himself lower than a dog, he says that being Irāmaṉ's servant is honour enough.
His last doubts and fears vanish. He places on his head Irāmaṉ's sandals, the "crown" that touches the Lord's feet, just as Paratan did earlier in the epic.