கம்பராமாயணம் 6552 · யுத்த 4.146
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
திருவடி முடியில் சூடி - இராமபிரானது பாதுகைகளை முடியிலே சூடிக்கொண்டு; செங்கதிர் உச்சி சேர்ந்த அருவரை என்ன நின்ற - செந்நிறக் கிரணங்களை உடைய சூரியனைத்தன் சிகரத்தில் கொண்ட அரியதொரு மலை என்னும்படி நின்றவனுமாகிய; அரக்கர்தம் அரசை நோக்கி - அரக்கர் குடிக்கே அரசனாகத்திகழும் வீடணனைப் பார்த்து; இருவரும் உவகை கூர்ந்தார் - இராமலக்குவராகிய இருவரும் மிக மகிழ்ந்தனர்; யாவரும் இன்பம் உற்றார் - அங்கிருந்த எல்லோரும் இன்பம் எய்தினர்; பொருவரும் அமரர் வாழ்த்தி - தமக்கு நிகர் வேறு எவருமில்லாத தேவர்கள் எல்லாம் வாழ்த்தி; பூமழை பொழிவதானார் - மலர்மாரி பொழியலானார்கள்.
தலைமீது இராமபிரானது பாதுகைகளை வைத்துக்கொண்டு நின்ற வீடணனுக்கு தனது சிரத்திலே சூரியனைக் கொண்டிருக்கும் மலை உவமை ஆயிற்று. மலை வீடணனுக்கும் செங்கதிர் பாதுகைகளுக்கும் உவமை. இருவரும் என்றது இராம இலக்குவர்களை. யாவரும் என்றது சுற்றும் நின்ற வானர சேனையை. வீடணன் இராமபிரானுடன் சேர்ந்துவிட்டதால் இராவணன் வீழ்ச்சி உறுதியாய் விட்டது என்பதால் தேவர்கள் மகிழ்ந்து மலர்மழை சொரிந்து வாழ்த்தினர் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Seeing the king of the rākṣasas, who wore the sacred feet as his crown
- and stood like a great mountain with the red-rayed sun upon its peak,
- the two brothers rejoiced; everyone there was filled with delight;
- and the peerless gods, singing his praises, began to shower flowers.
What the poem says
Vīṭaṇaṉ stands with Irāmaṉ's sandals on his head, like a dark mountain with the red sun resting on its summit.
Irāmaṉ and Ilakkuvaṉ are delighted, and so is the whole monkey army. The gods, knowing that Irāvaṇaṉ's fall is now certain, rain down flowers in blessing.