கம்பராமாயணம் 6553 · யுத்த 4.147

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பரவை ஏழும் அவனியும் ஆர்த்தன - ஏழுகடல்களும், மண்ணுலகமும், விண்ணுலகமும் ஆரவாரம் செய்தன; வார்த்தொழில் புரியும் தெய்வ மங்கல முரசும் சங்கும் - வாரால் கட்டப்பட்ட தெய்வீகமான மங்கல முரசுகள் முழங்கின; சங்குகளும் முழங்கின; கனகமாரி தூர்த்தன - வானவர் பொற்காசுகளை எங்கும் சொரிந்தனர்; நறுமென் சுண்ணம் - நல்ல மணமுள்ள மென்மையான வாசனைப்பொடிகள்; வானத்து அன்று போர்த்தது - வானத்தையே அன்று மூடிவிட்டது; அங்குத் துழனிப்பொம்மல் எழுந்தது - அங்கு மிகுந்த ஆரவாரம் எழலாயிற்று.

வார்த்தொழில் - வாரால் கட்டப்பட்ட தொழில். முரசு தெய்வத்தன்மை வாய்ந்தது. மங்கலமானது என்பதால் 'தெய்வமங்கல முரசு' எனப்பட்டது. சுண்ணம் - மணப்பொடி. துழனிப் பொம்மல் - ஆரவாரத்தின் மிகுதி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The seven seas roared, and the earth, and the land of the gods,
  2. and the divine auspicious drums bound with thongs, and the conch-shells;
  3. showers of gold poured down; fragrant soft powders were scattered;
  4. they covered the sky that day, and a mighty clamour rose up there.

What the poem says

The whole universe celebrates Vīṭaṇaṉ's coronation. The seven seas, the earth and heaven roar; sacred drums laced with leather straps and conches sound.

The gods rain down gold and fragrant powder until the sky is hidden, and a tremendous uproar of joy fills the air.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ārttaṉa, paravai ēḻum; avaṉiyum, amarar nāṭum,
vārt toḻil puṇarum teyva maṅkala muracum caṅkum;
tūrttaṉa kaṉaka māri; corintaṉa, naṟu meṉ cuṇṇam;
pōrttatu, vāṉattu, aṉṟu, aṅku, eḻuntatu tuḻaṉip pommal.