கம்பராமாயணம் 657 · பால 10.105
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(இவ்வாறு) அரசர்கோன் - அரசர் தலைவனான கௌசிகன்; மாண்ட மாதவத்தோன் - மாட்சிமை பெற்ற மாதவத்தனான வசிட்டன்; செய்த வலனையே - பெற்ற வெற்றிச்செயலையே; மனத்தின் எண்ணி - மனத்திலே இடைவிடாது சிந்தித்து; பூண்ட மா தவத்தன் ஆகி - மேற்கொண்ட பெருந்தவம் புரிந்தவனாய்; பொலியும் - திகழும்; நீர்மை - தன்மையை; காண்டலும் - நோக்கிய அளவில்; அமரர்வேந்தன் - தேவர் தலைவனான இந்திரன்; துணுக்கு உறு - அச்சம் மிகுந்த; கருத்தினோடும் - கருத்தோடு; அரம்பை மாருள் - அரம்பை முதலிய தெய்வப் பெண்களுள்; திலோத்தமை எனும் - திலோத்தமை என்ற; சொல் மானை - புகழ்கொண்ட மான் போன்ற பெண்ணை; தூண்டினான் - (அக் கௌசிகன் தவத்தைக் கலைக்கும் பொருட்டு) ஏவினான்.
சொல்: புகழ். இந்திரன் துணுக்குற்றதன் காரணம் பெருந்தவம் செய்பவரின் கபாலத்திலிருந்து ஒருவகை நெருப்பு மேல் எழுந்து தன் பொன்னுலகைச் சுட்டெரிக்கும் என்ற அச்சம். மாண்ட - மாண் என்ற வினைமுதல் அடியாக வந்த பெயரெச்சம். 'மாண்ட என்மனைவியொடு மக்களும் நிரம்பினர்' (புறம். 19)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Thinking in his mind only of the victory won by the sage of perfected penance,
- the king of kings took up great austerity; when he saw
- how he shone in it, the king of the immortals, with a startled mind,
- sent among the apsaras the famed doe Tilōttamai.
What the poem says
Kaucikaṉ practises fierce austerities, his mind fixed on the power Vaciṭṭaṉ showed. Indra, king of the gods, grows alarmed, fearing the fire of such penance would rise and scorch his heaven, and sends the celebrated celestial dancer Tilōttamai to break the king's concentration.