கம்பராமாயணம் 6575 · யுத்த 5.17

Section யுத்த காண்டம் / 5. இலங்கை வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எழுதலும் - (இராமன் கேட்டவைகளுக்கான விடை கூற வீடணன் எழுந்தான், அவ்வாறு எழலும்; முழுதுணர் புலவனை - முற்றும் உணர்ந்த அறிஞனான வீடணனை; 'இருத்தி' என்று இராமன் ஏயினான் - (உட்கார்ந்தே பேசலாம் என்ற எண்ணத்தால்) இருப்பாயாக என்று இராமபிரான் கூறினான்; முளரிக் கண்ணினான் - தாமரை மலர் போன்ற கண்களைஉடைய இராமபிரான்; பழுதற வினவிய பொருளை - குற்றம் நீங்கக் கேட்ட பொருள்களைப் பற்றியெல்லாம்; பண்பினால் தொழுதுயர் கையினான் - பண்போடு, தொழுதுயர்த்திய கைகளை உடையவனாக, தெரியச் சொல்லினான் - இராமபிரான் நன்கு தெரிந்து கொள்ள கூறுவானாயினான்.

போர் மேற்கொண்டு செல்லுதற்குமுன் பகைவனது வலிமையை ஆராய்ந்து அறிதல் வேந்தர்க்குரிய கடமை என்பதால் 'பழுதற வினவிய பொருள் என்றார். சொல்லுதலில் கேட்பவர்க்குத் தெளிவு வேண்டுமென்பதால் "தெரியச் சொல்லினான்” என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he rose, Irāmaṉ bade the all-knowing scholar, "Stay seated";
  2. and the things the lotus-eyed one had asked
  3. so carefully, he, with courtesy, his hands raised
  4. in worship, set out clearly.

What the poem says

Vīṭaṇaṉ stands up to answer, as respect requires, but Irāmaṉ asks him to stay seated.

With his hands still joined in reverence, Vīṭaṇaṉ explains clearly and fully everything Irāmaṉ has asked. His long account of Ilaṅkai's defences follows.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eḻutalum 'irutti' eṉṟu irāmaṉ ēyiṉāṉ
muḻutu uṇar pulavaṉai; muḷarik kaṇṇiṉāṉ
paḻutu aṟa viṉaviya poruḷaip paṇpiṉāl
toḻutu uyar kaiyiṉāṉ teriyac colliṉāṉ.