கம்பராமாயணம் 6577 · யுத்த 5.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வாழியாய் - நல்வாழ்வுடையவனே!; ஏழு நூறு யோசனை அகலம் - எழுநூறு யோசனை அகலமுடையதாகவும்; இட்ட கீழ் ஆழம் நூறு யோசனை - கீழ் ஆழம் நூறு யோசனை உடையதாகவும்; சூழும் மாமதில் - இலங்கை நகரைச் சூழ்ந்திருக்கும்படி கட்டப்பட்ட பெரிய மதில்; ஆழி மால் வரை - சக்கரவாளகிரி; உலகினை வளைத்த வண்ணமே - உலகத்தை வளைத்திருப்பதைப் போன்றதாகும்; அது சுடர்க்கும் மேலதால் - அம்மதில் சூரிய, சந்திரர்களுக்கும் எட்டாதபடி மேலே உயர்ந்ததாகும்.
வீடணன் இராமபிரானை 'வாழியாய்' என அழைத்துப் பேசுகிறான் என்றும் வாழ்ந்திருப்பவன் - நல்வாழ்வுடையவன் - அனைத்தையும் வாழவைப்பவன் என்றெல்லாம் கருதி 'வாழியாய்' என்றான் என்க. எழுநூறு யோசனை அகலமும், நூறு யோசனை ஆழமும் கொண்டதாக இந்த இலங்கையைச் சூழ்ந்துள்ள மதில் உலகை வளைத்திருக்கும் சக்கரவாள கிரியை ஒத்தது. சூரிய, சந்திரர்களாகிய சுடர்களுக்கும் எட்டாத உயரத்தில் இருப்பது என்பதால் 'சுடர்க்கு மேலதாய்' என்றான். ஆழி - சக்கரம். மால் - பெரிய.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Seven hundred yojanas broad, with foundations
- sunk a hundred yojanas deep, just as the great ring of mountains
- encircles the world, long may you live,
- the mighty wall surrounds it; and it rises above the sun and moon."
What the poem says
Vīṭaṇaṉ describes Ilaṅkai's great wall. It is seven hundred yojanas thick and its foundations go a hundred yojanas down; a yojana is a measure of several miles.
It rings the city as the mythical Cakravāḷa mountains ring the whole earth, and it is taller than the paths of the sun and moon. The figures are deliberately cosmic, to show the city's apparent invincibility.