கம்பராமாயணம் 6578 · யுத்த 5.20

Section யுத்த காண்டம் / 5. இலங்கை வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'மருங்குடை வினையமும் பொறியின் மாட்சியும்
இருங்கடி அரணமும் பிறவும் எண்ணினால்
சுருங்கிடும்; என்பல சொல்லில்? சுற்றிய
கரும் கடல் அகழ் அது; நீரும் காண்டிரால்.

பொருள் · Meaning in Tamil

மருங்கு உடை வினையமும் - அந்த மதிலிடத்தே அமைந்திருக்கும் வஞ்சக வேலைப்பாடுகளும், பொறியின் மாட்சியும் - இயந்திரங்களின் சிறப்பும்; இருங்கடி அரணமும் - பெரிய காவலையுடைய மதிலும்; பிறவும் எண்ணினால் - மற்ற ஏற்பாடுகளையும் நினைத்துப் பார்த்தால்; சுருங்கிடும் - ஆயுட்காலம் போதாதபடி சுருங்கிவிடும்; என் பல சொல்லி - பலவற்றையும் சொல்வதால் என்ன பயன்? சுற்றிய கருங்கடல் அகழது - சுற்றிலுமுள்ள கரிய பெரிய கடலே இலங்கையின் அகழியாயுள்ளது; நீரும் காண்டிரால் - நீங்களும் நேரில் காணலாம்.

பலவகையான இயந்திரங்களைக் கொண்டிருப்பதை "பொறியின் மாட்சி" என்றார். மிகுந்த காவலையுடைய மதிலை "இருங்கடி அரணம்” என்றார். இன்னும் எத்தனையோ வகையான பொறிகளும், படைக் கலங்களும் உண்டு என்பதை 'பிறவும்' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The cunning devices on its flanks, the excellence of its war-machines,
  2. its vast, closely guarded ramparts and all the rest — if I were to count them,
  3. life itself would fall short; why say much more? The black sea
  4. that surrounds it is its moat; you can see that for yourselves."

What the poem says

Vīṭaṇaṉ says it would take more than a lifetime to describe all the hidden traps, mechanical weapons and heavily guarded fortifications along the wall.

He sums it up with one fact anyone can see: the whole surrounding ocean serves as Ilaṅkai's moat.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'maruṅkuṭai viṉaiyamum poṟiyiṉ māṭciyum
iruṅ kaṭi araṇamum piṟavum eṇṇiṉāl
curuṅkiṭum; eṉ pala colli? cuṟṟiya
karuṅ kaṭal akaḻatu; nīrum kāṇṭirāl.