கம்பராமாயணம் 6579 · யுத்த 5.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வடதிசை வயங்கு ஒளி வாயில் வைகுவோர் - இலங்கை நகரின் வடக்குத் திசையில் உள்ள ஒளி விளங்கும் வாயிலில் தங்கிக் காவல் காப்பவர்கள்; இடை இலர் - எதற்கும் பின் வாங்காத வலிமை உள்ளவர்கள்; எண் இரு கோடி என்பர் - பதினாலு கோடி பேர் என்பார்கள்; கடையுக முடிவினில் - யுகாந்த காலமுடிவிலே; காலன் என்பது என் - உயிர்களையெல்லாம் கொல்லுகின்ற எமனைப் போன்றவர் என்று எப்படிச் சொல்வது?; விடை வரு பாகனை - காளை வாகனத்திலே வரும் சிவபிரானை; பொருவும் மேன்மையோர் - ஒத்த பெருமை மிக்கவராவார்.
பொன்னாலும் மணிகளாலும் பொலிந்து திகழும் வடதிசை வாயிலை வயங்கு ஒளிவாயில்" என்றார். எவருக்கும் பின் வாங்காத பெரு வலி படைத்த காவலர்களாதலின் 'இடை இலர்' என்றார். காலன் என்பதை விடக் காலகாலனான சிவன் என்பதே பொருந்தும் என்பது கருத்து. இடைதல் - பின் வாங்குதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Those who keep the bright, gleaming gate on the northern side,
- who never give ground, are said to number twice eight crores;
- why liken them to Death at the close of the final age?
- They are great enough to rival the one who rides the bull."
What the poem says
Vīṭaṇaṉ now describes the guards at each of Ilaṅkai's gates, beginning with the shining northern gate. Its defenders number sixteen crores (a crore is ten million), and they never retreat.
Comparing them to Death at the end of the world would be too weak. They are more like Śiva, rider of the bull, who destroys Death himself at the final dissolution.